Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
1 கப் மைதா வெச்சு.. ஈவ்னிங் இந்த போண்டாவை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க..
Kutty Bonda Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தைகளுக்கு காபி, டீயுடன் மொறுமொறுவென்று ஏதாவது செய்து கொடுத்தால், குழந்தைகளின் பசி அடங்குவதோடு, அவர்கள் மகிழ்ச்சியும் அடைவார்கள் அல்லவா? உங்கள் பிள்ளைகள் பஜ்ஜி, போண்டாவை விரும்பி சாப்பிடுவார்களா?
உங்கள் வீட்டில் மைதா மாவு, கடலை மாவு மற்றும் அரிசி மாவு உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் குட்டி போண்டாவை செய்யுங்கள். இந்த மொறுமொறுப்பான குட்டி போண்டாவானது சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு குட்டி போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குட்டி போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மைதா - 1 கப்
* கடலை மாவு - 1/2 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறு துண்டு (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* தயிர் - 1/4 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* சோடா உப்பு - 2 சிட்டிகை
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் மைதா மாவு, அரிசி மாவு, கடலை மாவு மற்றும்
சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி,
கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் 1/2 டீஸ்பூன் சீரகம் சேர்த்து
கைகளால் கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் தயிரை சேர்த்து கைகளால் பிசைந்து விட வேண்டும்.
* அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி போண்டா மாவு பதத்திற்கு மாவை
கலந்து கொள்ள வேண்டும். அதாவது மாவானது மிகவும் கெட்டியாகவோ அல்லது
மிகவும் நீராகவோ இருக்கக்கூடாது. மிதமான அளவில் இருக்க வேண்டும்.
அப்படி இருந்தால் தான் போண்டா மென்மையாக இருக்கும்.
* அதன் பின் அதில் 2 சிட்டிகை சோடா உப்பு சேர்த்து கலந்து கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் போண்டாக்களை
பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், அதில் பிசைந்து வைத்துள்ள போண்டா மாவை கொஞ்சம்
கொஞ்சமாக கிள்ளி போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான
குட்டி போண்டா தயார்.
Image Courtesy: Madras Virunthu



Click it and Unblock the Notifications