For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வட இந்தியாவில் நவராத்திரியில் செய்யப்படும் குட்டு ஹி பூரி தயாரிக்கும் முறை!!

குட்டு ஹி பூரி ரெசிபி பண்டிகை காலங்களில் கடைப்பிடிக்கும் விரதத்திற்கான உணவாகும். இதை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்

Posted By: Siganthi R
|

பண்டிகைகளின் போது வட இந்தியர்கள் தாங்கள் கடைபிடிக்கும் விரதத்திற்காக குட்டி கி பூரி ரெசிபியை தயாரிப்பர். இந்த ரெசிபியை ஸ்பெஷல் மாவான பாப்பரையை கொண்டு தயாரிப்பர். இந்த பூரியை விரதத்தின் எதாவது சைடிஸ் கொண்டு சாப்பிடலாம்.

இதே மாதிரி சில விரத ரெசிபிகளாவன : சுகி ஆர்பி , சிங்கார கி பூரி, கட்டு கி சப்ஷி, விரத் வாலா ஆலு, ஆலு டெமாட்டர் சப்ஷி

பாப்பரை மாவு உங்களுக்கு பிசு பிசுப்பு தன்மை இல்லாமலும் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவாகவும் பயன்படுகிறது. எனவே இதை பிணைவதற்கு எந்த கஷ்டமும் இருக்காது. இதுவே ஆலு ஆட்டா மிகவும் பிசைவதற்கு கடினமாக இருக்கும்.

இங்கே வேக வைத்த உருளைக்கிழங்கை வைத்து பூரி செய்ய வேண்டும். மாவை நன்றாக பிசைவதற்கு சரியான அளவு தண்ணீர் சேர்ப்பது மிகவும் முக்கியம். போதுமான அளவு தண்ணீர் சேர்க்கவில்லை என்றால் மாவை பிசைவதற்கு கடினமாக இருக்கும்.

நீங்கள் எந்த இறைவழிபாடு விழாக்களான நவராத்திரி, ஏகாதசி மற்றும் சிவராத்திரி போன்றவற்றிற்கு விரதம் இருக்க நினைத்தால் அதற்கு இந்த பூரி உணவு சிறப்பாக இருக்கும். சரி வாங்க இப்பொழுது குட்டு கி பூரி ரெசிபி செய்வது எப்படி என்று செய்முறை விளக்க படத்துடனும் வீடியோ மூலமும் காணலாம்.

குட்டு கி பூரி வீடியோ ரெசிபி

kuttu ki poori recipe
குட்டு கி பூரி ரெசிபி /குட்டு ஹீ ஆட்டா கி பூரி ரெசிபி /விரத் கி பூரி ரெசிபி /குட்டு ஆட்டா பூரி ரெசிபி /பக்வீட் பூரி ரெசிபி
குட்டு கி பூரி ரெசிபி /குட்டு ஹீ ஆட்டா கி பூரி ரெசிபி /விரத் கி பூரி ரெசிபி /குட்டு ஆட்டா பூரி ரெசிபி /பக்வீட் பூரி ரெசிபி
Prep Time
15 Mins
Cook Time
45M
Total Time
1 Hours

Recipe By: மீனா பந்தரி

Recipe Type: மீனா பந்தரி

Serves: 7-8 பூரிகள்

Ingredients
  • வேக வைத்த உருளைக்கிழங்கு (தோலுரித்து மசித்து கொள்ளவும்) - 1

    படிக உப்பு (ராக் சால்ட்) - சுவைக்கு

    பாப்பரை மாவு - 1கப்

    தண்ணீர் - 1/6 கப்

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் +பொரிப்பதற்கு

Red Rice Kanda Poha
How to Prepare
  • 1. வேக வைத்த உருளைக்கிழங்கை ஒரு பெளலில் எடுத்து கொள்ளவும்.

    2. இதனுடன் ராக் சால்ட் சேர்க்கவும்.

    3. இதனுடன் இப்பொழுது பாப்பரை மாவு சேர்க்கவும்.

    4. தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நன்றாக அடித்து பிசைந்து கொள்ள வேண்டும்.

    5. ஒரு கவரால் மூடி அரை மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்.

    6. மாவை சரிசமமாக எடுத்து பந்து போல் உருண்டை உருண்டையாக உருட்டி கொள்ளுங்கள்.

    7. சப்பாத்தி கல்லில் எண்ணெய்யை தடவிக் கொள்ளவும்.

    8. இப்பொழுது ஒவ்வொரு உருண்டையாக வைத்து பூரி போல் தேய்க்க வேண்டும்.

    9. பொரிப்பதற்கு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

    10. பூரியை ஒவ்வொன்றாக எண்ணெய்யில் போட்டு பொரிக்க வேண்டும்.

    11. பூரி புஷ் என்று எம்மி வந்ததும் மறுபக்கம் திருப்பி சற்று வேக விட வேண்டும்.

    12. பூரியானது பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும். பிறகு அடுப்பிலிருந்து எடுத்து விடவும்.

    13. சூடான பூரியை தட்டில் வைத்து பரிமாறவும்.

Instructions
  • 1. தண்ணீர் தேவைப்பட்டால் மட்டும் சேர்க்கவும். மாவு ஒட்டும் பதத்தில் இருந்தால் இன்னும் கொஞ்சம் மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  • 2. பிசைந்த மாவு தேய்ப்பதற்கு கொஞ்சம் சரியான பதத்தில் இல்லா விட்டால் 15 நிமிடங்கள் பிரிட்ஜில் வைத்து அப்புறம் பயன்படுத்தவும்.
  • 3. உருளைக்கிழங்குக்கு பதிலாக ஆர்மியை பயன்படுத்தலாம்.
Nutritional Information
  • பரிமாறும் அளவு - 1 பூரி
  • கலோரிகள் - 133 கலோரிகள்
  • கொழுப்பு - 33 கிராம்
  • புரோட்டீன் - 7 கிராம்
  • கார்போஹைட்ரேட் - 27 கிராம்
  • நார்ச்சத்து - 3 கிராம்

படிப்படியான செய்முறை விளக்கம் : குட்டு கி பூரி ரெசிபி செய்வது எப்படி

1. வேக வைத்த உருளைக்கிழங்கை ஒரு பெளலில் எடுத்து கொள்ளவும்.

2. இதனுடன் ராக் சால்ட் சேர்க்கவும்.

3. இதனுடன் இப்பொழுது பாப்பரை மாவு சேர்க்கவும்.

4. தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நன்றாக அடித்து பிசைந்து கொள்ள வேண்டும்.

5. ஒரு கவரால் மூடி அரை மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்.

6. மாவை சரிசமமாக எடுத்து பந்து போல் உருண்டை உருண்டையாக உருட்டி கொள்ளுங்கள்.

7. சப்பாத்தி கல்லில் எண்ணெய்யை தடவிக் கொள்ளவும்.

8. இப்பொழுது ஒவ்வொரு உருண்டையாக வைத்து பூரி போல் தேய்க்க வேண்டும்.

9. பொரிப்பதற்கு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

10. பூரியை ஒவ்வொன்றாக எண்ணெய்யில் போட்டு பொரிக்க வேண்டும்.

11. பூரி புஷ் என்று எம்மி வந்ததும் மறுபக்கம் திருப்பி சற்று வேக விட வேண்டும்.

12. பூரியானது பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும். பிறகு அடுப்பிலிருந்து எடுத்து விடவும்.

13. சூடான பூரியை தட்டில் வைத்து பரிமாறவும்.

[ 5 of 5 - 104 Users]
English summary

Kuttu Ki Poori Recipe

Kuttu Ki Poori Recipe
Story first published: Monday, September 11, 2017, 17:20 [IST]
Desktop Bottom Promotion