Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
1/2 கப் குதிரைவாலி இருந்தா இட்லி, தோசைக்கு இந்த சட்னியை அரைச்சு சாப்பிடுங்க..உங்க எடை புயல் வேகத்துல குறையும்!
Kuthiraivali Chutney Recipe in Tamil: ஒவ்வொரு நாளும் காலையில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்து முடிவெடுப்பதே ஒரு பெரிய வேலையாக உள்ளதா? எப்போதும் ஒரே சட்னியை செய்து கொடுப்பதால், வீட்டில் உள்ளவர்கள் சரியாக சாப்பிடுவதில்லையா? அப்படியானால் புதுவகையான அதேசமயம் ஆரோக்கியமான சட்னி செய்ய விரும்புகிறீர்களா?
அப்படியானால் இந்த குதிரைவாலி சட்னியை முயற்சி செய்து பாருங்கள். குதிரைவாலி சட்னி என்பது ஒரு எளிய மற்றும் ஆரோக்கியமான சட்னியாகும், இது இட்லி அல்லது தோசைக்கு சிறந்த சைடிஷாக இருக்கும். இந்த சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சட்னி சூடான சாதத்தில் போட்டு ஒரு துளி நெய்யுடன் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். குதிரைவாலி மற்ற தானியங்களை விட மிகவும் ஆரோக்கியமான ஒரு தானியமாகும்.

உங்களுக்கு குதிரைவாலி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குதிரைவாலி சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- 1/2 கப் குதிரைவாலி பருப்பு
- 1/2 கப் எள்
- 2 ஸ்பூன் துவரம் பருப்பு
- 2 ஸ்பூன் கடலை பருப்பு
- 10 சின்ன வெங்காயம்
- 2 ஸ்பூன் மல்லி விதை
- 1 ஸ்பூன் வெந்தயம்
- நெல்லிக்காய் அளவு புளி
- 1/4 கப் துருவிய தேங்காய்
- 4 வர மிளகாய்
- 6 பூண்டு பல்
- உப்பு தேவையான அளவு
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் கடலைப் பருப்பு
- 1/2 ஸ்பூன் உளுந்தம் பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- குதிரைவாலி எள் சட்னியை செய்ய முதலில் குதிரைவாலி மற்றும் எள்ளை தனித்தனியாக மிதமான தீயில் வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். குதிரைவாலி பழுப்பு நிறமாக மாறியதும் அடுப்பை அணைத்து ஆற வைக்கவும்.
- ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி துவரம்பருப்பு, கடலைப் பருப்பு, வெந்தயம் மற்றும் மல்லி விதைகளைச் சேர்த்து வறுக்கவும். பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- பின்னர் அதனுடன் வர மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் புளி சேர்க்கவும்.
- அனைத்தையும் ஒரு நிமிடம் வறுத்து ஆற விடவும். அது ஆறியதும், வறுத்த குதிரைவாலி மற்றும் எள்ளுடன் மிக்ஸியில் சேர்க்கவும்.
- பின்னர் துருவிய தேங்காய், தேவையான உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அனைத்தையும் மென்மையான பேஸ்டாக அரைக்கவும். பின்னர் ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, கடுகு, கடலைப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னி மீது கொட்டி கிளறினால் சுவையான மற்றும் ஆரோக்கியமான குதிரைவாலி சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications