Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
புரட்டாசி மாச ஸ்பெஷல் குஸ்கா ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு சாப்பிடுங்க... சிக்கன் பிரியாணி மாதிரியே இருக்கும்!
Kushka Recipe in Tamil: எப்போதும் மதியம் சாம்பார், புளிக்குழம்பு மற்றும் குருமா என்று செய்து போரடித்துவிட்டதா? மதியம் டக்கென்று 10 நிமிடத்தில் ஒரு சுவையான சமையலை செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? அப்படியானால் கவலையே வேண்டாம். வீடே மணக்கும் அளவில் ஒரு சுவையான குஸ்காவை 10 நிமிடத்தில் செய்யலாம். புரட்டாசி மாதம் வேறு வந்துவிட்டதால் இந்த குஸ்காவை செய்து சாப்பிடுவது அசைவம் இல்லாத குறையை சிறிதளவு போக்கும்.
இந்த ப்ளைன் பிரியாணி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, மிகவும் சுவையாகவும் இருக்கும். உங்களுக்கு புரட்டாசி மாத ஸ்பெஷல் குஸ்காவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குஸ்காவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுடிவத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
- சீரகசம்பா அரிசி- 4 டம்ளர்
- தேங்காய் என்ணெய் - 2 டீஸ்பூன்
- நெய் - 4 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 4
- கரம் மசாலா- 1 ஸ்பூன்
- புதினா- 1/2 கப்
- கொத்தமல்லி - 1/2 கப்
- பச்சை மிளகாய் - 4
- சின்ன வெங்காய விழுது- 1/4 கப்
- தக்காளி - 6
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- தயிர்- கால் கப்
- இஞ்சி பூண்டு விழுது- 5 ஸ்பூன்
- எலுமிச்சை பழம்- 2
- கேசரி பவுடர் - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- ஒரு வாயன்ற பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் நெய்யை விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் அதில் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
- பின்னர் கறிமசாலா பொடி சேர்த்து வதக்கவும். பின்னர் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- புதினா கொத்தமல்லி நன்கு சுருண்டதும் பின்னர் சின்ன வெங்காய விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி, மிளகாய் தூள், தயிர், சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
- மசாலா பச்சை வாசனை போனது டம்ளருக்கு 2 என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- தண்ணீர் நன்கு கொதித்ததும் அரிசியை சேர்த்து லேசாக தண்ணீர் இருக்கும் வரையில் மென்மையான தீயில் வைத்து கிளறவும்.
- நீர் வற்ற ஆரம்பிக்கும் தருவாயில் எலுமிச்சை சாறு ஊற்றி மீண்டும் எல்லா பக்கமும் படும் படி கிளறவும்.
- பின் கலர்கேசரி பொடியை நீரில் கரைத்து மேலாக ஊற்றி விட்டு கலக்காமல் அப்படியே மூடி தம்மில் போடவும்.
- 15 நிமிடம் கழித்து தம்மை திறந்தால் கமகமக்கும் குஸ்கா ரெடி!



Click it and Unblock the Notifications