Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
10 நிமிடத்தில் ருசியான குஸ்கா செய்யணுமா? இப்படி செய்யுங்க.. வீடே மணக்கும்... சுவையும் அள்ளும்...
Kushka Recipe In Tamil: எப்போதும் மதியம் சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து போரடித்துவிட்டதா? மதியம் டக்கென்று 10 நிமிடத்தில் ஒரு சுவையான சமையலை செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? அப்படியானால் கவலையே வேண்டாம். வீடே மணக்கும் அளவில் ஒரு சுவையான குஸ்காவை 10 நிமிடத்தில் செய்யலாம். இந்த ப்ளைன் பிரியாணி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, மிகவும் சுவையாகவும் இருக்கும்.
உங்களுக்கு குஸ்காவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குஸ்கா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுடிவத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* சின்ன வெங்காயம் - 10
* பூண்டு - 6 பல்
* இஞ்சி - 1 இன்ச்
* தக்காளி - 2
பிரியாணிக்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 2
* கல்பாசி - சிறிது
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* புதினா -1 கைப்பிடி
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* பச்சை மிளகாய் - 1
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 3/4 டீஸ்பூன்
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 1/2 கப்
* எலுமிச்சை - பாதி
* பாசுமதி அரிசி - 1 கப்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி
ஆகியவற்றை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு பாசுமதி அரிசியை நீரில் கழுவிவிட்டு, பின் அதில் நீரை ஊற்றி
10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய்
ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, பிரியாணி இலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு 2
நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மிளகாய் தூள், கரம் மசாலா, காஷ்மீரி மிளகாய் தூள்,
மல்லித் தூள் சேர்த்து கிளறி, தயிரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி, அதன் பின் பாதி எலுமிச்சையின்
சாற்றினை சேர்த்து கிளறி, கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் கொதிக்க ஆரம்பித்ததும், ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை சேர்த்து
கிளறி, குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து, 2 விசில் விட்டு
இறக்கினால், சுவையான குஸ்கா தயார்.



Click it and Unblock the Notifications