Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஆரோக்கியமான இனிப்பை செஞ்சு கிருஷ்ணரை கும்பிடுங்க... சுவையும் அட்டகாசமாக இருக்கும்...!
Krishna Jayanthi Special Millets Urundai Recipe in Tamil: வழக்கமாகவே கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்யும் போது ஏதாவது ஒரு இனிப்பு இருக்கும். ஆனால் கோகுலாஷ்டமி வந்தால் போதும் விதவிதமான இனிப்புகள் நெய்வேத்தியமாக செய்வார்கள். சிலர் வீடுகளில் அனைத்தையும் செய்து வழிபடுவார்கள்.
ஆனால் இப்போதைய நவீன காலத்தில் எளிதாக கடைகளில் வாங்கி வைத்து விடுகிறார்கள். என்ன தான் கடைகளில் வாங்கினாலும் ஆரோக்கியமான தின்பண்டங்கள் மீது அனைவருக்குமே விருப்பம் இருக்கும். நீங்க அப்படி நினைத்தால், இந்த கோகுலாஷ்டமிக்கு உங்க வீட்ல ஆரோக்கியமான இந்த சிறுதானிய ஸ்வீட் உருண்டைகளை செய்து பாருங்க.

தேவையான பொருள்கள்:
- குதிரைவாலி - 1 கப்
- கம்பு - 1 கப்
- திணை - 1 கப்
- கேழ்வரகு - 1 கப்
- வெல்லம் - 1 கப்
- கடலைப்பருப்பு - ¼ கப்
- தேங்காய் - ½ மூடி
- முந்திரி - 10 அல்லது 15
- பாதாம் - 10 அல்லது 15
- வேர்க்கடலை - ¼ கப் (வறுத்தது)
- எள் - 1 டீ ஸ்பூன்
- நெய் - 2 டேபிள் ஸ்பூன்
- பூசணி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
- சிறுதானியங்களை இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீர் சேர்த்து அலசி ஈரம் போக நன்கு காய வைத்து கொள்ளவும்.
- பின் அதை வாணலியில் சேர்த்து குறைவான தீயில் நிறம் மாறாமல் வறுத்து ஆறவிடவும்.
- பின் மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்து மீண்டும் ஆறவிடவும்.
- அதே போல் கடலைப்பருப்பையும் வறுத்து ஆறவைத்து பொடி செய்து கொள்ளவும்.
- முந்திரி, பாதாம், மற்றும் வேர்கடலையை உடைத்து வைக்கவும்.
- தேங்காயை துருவி நார் அல்லது ஓடு இல்லாமல் எடுத்து கொள்ளவும்.
- வெல்லத்தை சிறிய துண்டுகளாக உடைத்து ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும்.
- அதனுடன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
- வெல்லம் கரைந்ததும் அதை வடித்து மண் நீக்கி சுத்தம் செய்து, அதை மீண்டும் கொதிக்க வைக்கவும்.
- பாகு நன்கு கொதித்ததும் உடைத்த முந்திரி, பாதாம், வேர்க்கடலை, எள், மற்றும் துருவிய தேங்காயை அதனுடன் சேர்த்து கிளறவும்.
- அடிப்பிடிக்க விடாமல் தொடர்ந்து கிளறி கொண்டே இருக்கவும்.
- பின் அரைத்து ஆற வைத்த குதிரைவாலி, கம்பு, திணை மற்றும் கேழ்வரகு மாவு மற்றும் கடலைப்பருப்பு மாவையும் சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும்.
- அதனுடன் நெய் சேர்த்து நன்றாக கையில் உருட்டும் பதம் வரும் வரை கிளறி அடுப்பை அணைக்கவும்.
- இந்த மாவை நன்கு பிசைந்து விட்டு, எலுமிச்சை பழ அளவில் உருட்டி கொள்ளவும்.
- கடைசியாக பூசணி விதைகளின் மீது உருட்டி எடுத்தால் ஆரோக்கியமான சிறுதானிய ஸ்வீட் உருண்டை ரெடி!
- பூசணி விதைகளுடன் உங்களுக்கு விருப்பமான விதைகள் அல்லது நட்ஸ் சேர்த்து உருட்டி கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications