Latest Updates
-
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
கிருஷ்ண ஜெயந்திக்கு 1 1/2 கப் அவல் வெச்சு 5 நிமிஷத்துல இந்த லட்டு ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
Krishna Jayanthi Special Aval Laddoo Recipe In Tamil: கிருஷ்ண ஜெயந்தி நெருங்கிக் கொண்டிருக்கிறது. பலரும் தங்கள் வீடுகளில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்களை செய்து படைத்து கிருஷ்ணரை வழிபடுவார்கள்.
உங்கள் வீட்டிலும் அப்படியொரு பழக்கம் இருந்தால், இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்திக்கு ஒரு சிம்பிளான அதே சமயம் சுவையான ஸ்வீட் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அவல் உள்ளதா?

அப்படியானால் அந்த அவலைக் கொண்டு லட்டு செய்யுங்கள். இந்த அவல் லட்டு செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இந்த லட்டு 4 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
உங்களுக்கு அவல் லட்டுவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் லட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அவல் - 1 1/2 கப்
* ஏலக்காய் - 2
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* நெய் - 1 டீஸ்பூன்
* முந்திரி - 5
* வெல்லம் - 1/4 கப்
* தண்ணீர் - 2-3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அவலை போட்டு
சூடாகும் அளவில் வறுத்து இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த அவல் மற்றும் ஏலக்காயை சேர்த்து நன்கு
பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு பொடித்த அவலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துருவிய தேங்காயை
சேர்த்து நன்கு வறுத்து இறக்கி, அதையும் பொடித்த அவலுடன் சேர்க்க
வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி,
முந்திரியை உடைத்து சேர்த்து வறுத்து, அதையும் அவலுடன் சேர்க்க
வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெல்லத்தை சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி கரைத்து இறக்கி, வடிகட்டி அவலுடன் சேர்த்து, கிளறி
விட வேண்டும்.
* இறுதியாக கைகளால் நன்கு பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக
உருட்டினால், சுவையான அவல் லட்டு தயார்.
Image Courtesy: kurinji. com



Click it and Unblock the Notifications