Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: ரவா பாயாசம்
கிருஷ்ணருக்கு பாலால் தயாரிக்கப்படும் இனிப்பு பொருட்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். நீங்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு ஒரு வித்தியாசமான பாயாசம் செய்து படைக்க நினைத்தால், ரவா பாயாசம் செய்யுங்கள்.
இன்று கிருஷ்ண ஜெயந்தி. பலரது வீடுகளிலும் மாலை வேளையில் கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்களை செய்து படைத்து பூஜைகளை செய்து கிருஷ்ணரை வணங்குவார்கள். கிருஷ்ணருக்கு பாலால் தயாரிக்கப்படும் இனிப்பு பொருட்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். நீங்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு ஒரு வித்தியாசமான பாயாசம் செய்து படைக்க நினைத்தால், ரவா பாயாசம் செய்யுங்கள். இந்த பாயாசம் செய்வது மிகவும் எளிது. மேலும் இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு ரவா பாயாசம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா பாயாசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவை - 1/2 கப்/100 கிராம்
* பால் - 1 லிட்டர்
* சர்க்கரை - 200 கிராம்
* கண்டென்ஸ்ட் மில்க் - 3 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் - 5
* முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
* உலர் திராட்சை - 2 டேபிள் ஸ்பூன்
* நெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வதக்கி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மீதமுள்ள நெய்யை வாணலியில் ஊற்றி, அதில் ரவையை சேர்த்து 3 நிமிடம் நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் பாலை ஊற்றி கட்டிகள் சேராதவாறு நன்கு கிளறி கொதிக்க விட்டு, 10-15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* ரவையானது நன்கு வெந்ததும், அதில் ஏலக்காயை தட்டிப் போட்டு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் சர்க்கரை மற்றும் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து கிளறி, 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான ரவா பாயாசம் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications