Latest Updates
-
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
கேட்டரிங் ஸ்டைல் கோவைக்காய் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
Catering Style Kovakkai Varuval Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு கோவைக்காய் என்றால் பிடிக்காதா? கோவைக்காய் செய்தாலே அலறி அடித்து ஓடுவார்களா? அப்படிப்பட்டவர்களை கோவைக்காய் சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் கேட்டரிங் ஸ்டைலில் கோவைக்காய் வறுவலை செய்து கொடுங்கள். இப்படி கோவைக்காய் வறுவல் செய்யும் போது பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த வறுவல் அனைத்து விதமான சாதத்துடனும் சேர்த்து சாப்பிட ஏற்றவாறு இருக்கும்.

உங்களுக்கு இந்த கேட்டரிங் ஸ்டைல் கோவைக்காய் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேட்டரிங் ஸ்டைல் கோவைக்காய் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கோவைக்காய் - 1/2 கிலோ
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
வறுத்து பொடி செய்வதற்கு...
* வரமிளகாய் - 3
* காஷ்மீரி வரமிளகாய் - 4
* கறிவேப்பிலை - 1 கொத்து
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் கோவைக்காயை நீரில் கழுவி, அவற்றை மெல்லியதாக நறுக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு
மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய கோவைக்காயை சேர்த்து, 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
கிளறி விட்டு, மூடி வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக வைக்க
வேண்டும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் வரமிளகாய்,
காஷ்மீரி வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்க
வேண்டும்.
* பிறகு அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு ஈரப்பதம் போக வறுத்து
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, அத்துடன் 1
டீஸ்பூன் சீரகம் சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் கோவைக்காய் வெந்ததும், அதில் வறுத்த பொடியை சேர்த்து
நன்கு கிளறி விட வேண்டும்.
* ஒருவேளை காரம் போதவில்லை என்றால், சிறிது மிளகாய் தூளை சேர்த்து,
குறைவான தீயில் வைத்து, 5 நிமிடம் நன்கு வதக்கி வேக வைத்து
இறக்கினால், சுவையான கேட்டரிங் ஸ்டைல் கோவைக்காய் வறுவல் தயார்.



Click it and Unblock the Notifications
