Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
பூரி, சப்பாத்திக்கு கோவைக்காயை வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Kovakkai Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி அல்லது பூரி செய்வீர்களா? அதற்கு எப்போதும் ஒரே மாதிரி உருளைக்கிழங்கு சைடு டிஷ் தான் செய்வீர்களா? இப்படி உருளைக்கிழங்கு செய்து போரடித்துவிட்டதா?
உங்கள் வீட்டில் கோவைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த கோவைக்காயைக் கொண்டு கிரேவி செய்யுங்கள். இந்த கிரேவி சப்பாத்தி, பூரியுடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு கோவைக்காய் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோவைக்காய் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோவைக்காய் - 1/4 கிலோ
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பச்சை வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 8 பல்
* இஞ்சி - சிறிய துண்டு
* பெரிய வெங்காயம் - 1
* ஏலக்காய் - 2
* பட்டை - சிறிய துண்டு
* கிராம்பு - 3
* முந்திரி - 5
* எள்ளு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* புளி - சிறிய எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக்
கொள்ளவும்)
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் கோவைக்காயை நீரில் நன்கு கழுவி, முனைகளை நீக்கிவிட்டு,
கத்தியால் நடுவே ஆங்காய் கீறி விட வேண்டும். இதனால் மசாலா அனைத்தும்
உள்ளே இறங்கி, சுவை நன்றாக இருக்கும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கோவைக்காயை சேர்த்து 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு
பச்சை வாசனை போக வதக்கி இறக்கி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பச்சை வேர்க்கடலையை சேர்த்து நன்கு பொன்னிறமாக
வறுக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு, இஞ்சி மற்றும் நறுக்கிய பெரிய வெங்காயத்தை
சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் ஏலக்காய், பட்டை, கிராம்பு, முந்திரி, எள்ளு விதைகளை
சேர்த்து நன்கு 3-4 நிமிடம் கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் சீரகத்தை
சேர்த்து சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கோவைக்காயை சேர்த்து,
அரைத்த விழுதை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, புளிச்சாற்றினையும் ஊற்றி கிளறி, குக்கரை மூடி 3-4 விசில்
விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவினால்,
சுவையான கோவைக்காய் கிரேவி தயார்.
Image Courtesy: Akshaya. com



Click it and Unblock the Notifications











