Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
கோவைக்காயை இந்த பக்குவத்துல ஒருடைம் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
Kovakkai Varuval Recipe In Tamil: மதியம் என்ன பொரியல் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கோவைக்காய் உள்ளதா? ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் கோவைக்காயை விரும்பி சாப்பிடமாட்டார்களா? அவர்களை கோவைக்காய் சாப்பிட வைக்க வேண்டுமா?
அப்படியானால் அவர்களுக்கு கோவைக்காயை இந்த பக்குவத்தில் வறுவல் செய்யுங்கள். இப்படி கோவைக்காய் வறுவலை செய்யும் போது, பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கும் போது, அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள்.

உங்களுக்கு கோவைக்காய் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோவைக்காய் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி வரமிளகாய் - 6
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* தேங்காய் - 1 சில்லு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கோவைக்காய் - 1/4 கிலோ (நீளவாக்கில் நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பு,
கடலைப்பருப்பு, மல்லி, வரமிளகாய், சீரகம், மிளகு, தேங்காய் ஆகியவற்றை
சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* நல்ல மணம் வந்து, நிறம் லேசாக மாறியதும், அதை இறக்கி குளிர வைத்து,
பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய், பெருங்காயத்
தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் நீளவாக்கில் நறுக்கிய கோவைக்காயை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு தூவி கிளறி, மூடி வைத்து, 5-7 நிமிடம் கோவைக்காயை வேக வைக்க
வேண்டும்.
* கோவைக்காய் நன்கு வெந்ததும், மூடியைத் திறந்து, அதில் அரைத்த
மசாலாவை சேர்த்து கிளறி, 2-3 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான
கோவைக்காய் வறுவல் தயார்.



Click it and Unblock the Notifications