Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
வரலட்சுமி விரத ஸ்பெஷல் கோதுமை பாயாசம் ரெசிபி... செஞ்சு பாருங்க... அருளும், ஆரோக்கியமும் சேர்ந்து கிடைக்கும்...
Kothumai Payasam Recipe in Tamil: வீட்டில் செய்யக் கூடிய இனிப்பு என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது பாயாசம்தான். பண்டிகை அல்லது விஷேச நாட்களில் வீட்டில் பாயாசம் செய்வது பெரும்பாலான வீடுகளில் வழக்கம். நாளை வரலக்ஷ்மி விரதம் வருவதால் லட்சுமி தேவியை வழிபட ஏதாவது இனிப்பு செய்ய வேண்டும். அது ஆரோக்கியமான பாயாசமாக இருந்தால் கடவுளின் அருளும் கிடைக்கும், உங்களுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும்.
பொதுவாக பாயாசத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் நாம் அறிந்தது சேமியா பாயாசம், ஜவ்வரிசி பாயாசம், பருப்பு பாயாசம் போன்றவை தான். ஆனால் கோதுமையை வைத்துக் கூட சுவையான பாயாசம் செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? உண்மைதான், கோதுமையை வைத்து சூப்பரான மற்றும் ஆரோக்கியமான பாயாசத்தை செய்யலாம். வரலக்ஷ்மி விரத நாளில் எப்படி கோதுமை பாயாசத்தை வைத்து லட்சுமி தேவியின் அருளைப் பெறலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- உடைத்த கோதுமை - 1 கப்
- பாதாம் பருப்பு - 10
- முந்திரி - 10
- உலர் திராட்சை - 20
- வெல்லம் - 1 கப்
- நெய் - 2 டேபிள் ஸ்பூன்
- துருவிய தேங்காய் - 1 கப்
- பால் - அரை கப்
- தண்ணீர் - தேவையான அளவு
- கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
- முதலில் முந்திரி, வெல்லம் மற்றும் திரட்சையை நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.
- கோதுமை பாயாசம் செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் உடைத்த கோதுமையை போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் நன்கு ஊறவைக்கவும். பின்பு தண்ணீரை வடிகட்டி ஓரமாக வைக்கவும்.
- பிறகு குக்கரில் வடிகட்டி வைத்துள்ள கோதுமையை கொட்டி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பருப்பு வேகவைப்பது போல் 3 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
- விசில் வந்த பிறகு உடனே குக்கரை திறக்காமல் 10 நிமிடம் கழித்து ஆவி அடங்கியதும் குக்கரை திறக்கவும்.
- அதன் பிறகு அடுப்பில் கடாயை வைத்து கசகசாவை லேசாக வறுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
- அதே கடாயில், வெல்லத்தை சேர்த்து, அதனுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள், 10 நிமிடங்கள் வெல்லம் முழுவதுமாக கரையும் வரை சூடுபடுத்தவும்.
- வெல்லப்பாகு ரெடியாகிக் கொண்டிருக்கும்போதே ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் மற்றும் வறுத்த கசகசாவை சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மென்மையாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- அரைத்த விழுதை கொதித்துக் கொண்டிருக்கிற வெல்லப்பாகில் போட்டு, நன்றாகக் கலக்கவும்.
- பின்பு அவற்றை மூடியை கொண்டு மூடி மிதமான தீயில் 2-3 நிமிடங்கள் அந்த கலவையை வேகவிடவும்.
- அதன்பின், அந்த கலவையோடு வேகவைத்த உடைத்த கோதுமையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்கு கிளறி 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து ஏலக்காய் பொடி சேர்த்து ஒருமுறை நன்கு கிளறிவிடுங்கள்.
- அடுத்ததாக, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்க்கவும். பின்னர் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறிவிட்டு,பின் கடைசியாக பால் சேர்க்க வேண்டும்.
- பால் நன்கு கலந்துவிட்ட பின், அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
- வரலக்ஷ்மி ஸ்பெஷல் சுவையான உடைத்த கோதுமை பாயாசம் ரெடி.
- பாயாசம் செய்யும் போது தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் கட்டிகள் இல்லாமல் இருக்கும்.



Click it and Unblock the Notifications