Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
கொத்தவரங்காயை வெச்சு இப்படி கார குழம்பு செய்யுங்க.. சாதத்துடன் சாப்பிட சூப்பரா இருக்கும்...
Kothavarangai Kara Kuzhambu Recipe In Tamil: மதிய வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கொத்தவரங்காய் உள்ளதா? இதுவரை நீங்கள் கொத்தவரங்காயை கொண்டு பொரியல், அவியல் என்று செய்திருக்கலாம்.
ஆனால் அதைக் கொண்டு கார குழம்பு செய்திருக்கிறீர்களா? இல்லையென்றால், அடுத்தமுறை கொத்தவரங்காயைக் கொண்டு காரகுழம்பு செய்யுங்கள். இந்த கொத்தவரங்காய் கார குழம்பு செய்வது மிகவும் சுலபம் மற்றும் இது சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு கொத்தவரங்காய் கார குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொத்தவரங்காய் கார குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
* சின்ன வெங்காயம் - 10-12
* கொத்தவரங்காய் - 15
* சாம்பார் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின் கொத்தவரங்காயை இரண்டு இன்ச் துண்டுகளாக வெட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின்பு புளியை 1 கப் நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, பின் அதை
பிசைந்து சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, வெந்தயம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பிறகு சின்ன வெங்காயம் மற்றும் கொத்தவரங்காயை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் சாம்பார் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு 2-3
நிமிடம் கிளறி விட வேண்டும்.
* அடுத்து புளிச்சாற்றினை சேர்த்து, மிதமான தீயில் வைத்து, நன்கு
பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கொத்தவரங்காய்
கார குழம்பு தயார்.
Image Courtesy: padhuskitchen



Click it and Unblock the Notifications