Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
மதியம் சாதத்துக்கு எப்பவும் சாம்பார், குழம்பு செய்யாம.. கொத்தமல்லியை இப்படி செஞ்சு சாப்பிடுங்க..
Kothamalli Thokku Recipe In Tamil: மதிய வேளையில் எப்போதும் சாம்பார், குழம்பு செய்து போரத்துவிட்டதா? சிம்பிளாக ஏதாவது செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கொத்தமல்லி, புதினா உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் தொக்கு செய்யுங்கள்.
இந்த கொத்தமல்லி தொக்கு சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். முக்கிமாக ஒருமுறை இந்த தொக்கு செய்தால், 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.

உங்களுக்கு கொத்தமல்லி தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொத்தமல்லி தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பொடி செய்வதற்கு...
* மிளகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - 1 கட்டு
* புதினா - 1 கட்டு
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* பூண்டு - 20 பல்
* வரமிளகாய் - 5
* புளி - 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக்
கொள்ளவும்)
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லத் தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, வெந்தயம்,
கடுகு சேர்த்து, பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர்
ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை
சேர்த்த 2 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு
ஒருமுறை லேசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பூண்டு, வரமிளகாய் சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் புளி சாற்றினை ஊற்றி கிளறி, நன்கு 5 நிமிடம் கொதிக்க
விட வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து, அத்துடன் மிளகாய்
தூள், மல்லித் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, நீர்
வற்றும் வரை கொதிக்க விட வேண்டும்.
* நீர் வற்றியதும், அரைத்து வைத்துள்ள மல்லியை சேர்த்து நன்கு கிளறி,
10-15 நிமிடம் நன்கு நிறம் மாறும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் சிறிது வெல்லத்தை சேர்த்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க
வைத்து இறக்கினால், சுவையான கொத்தமல்லி தொக்கு தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications