Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
கொத்தமல்லி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்..
Kothamalli Chinna Vengaya Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை தான் செய்யப் போகிறீர்களா? அதற்கு சைடு டிஷ்ஷாக சட்னி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதுவும் கொத்தமல்லி சட்னியை செய்ய போகிறீர்களா? கொத்தமல்லி சட்னியை பலவிதங்களில் செய்வார்கள்.
நீங்கள் செய்யும் கொத்தமல்லி சட்னி மிகவும் ருசியாக இருக்க வேண்டுமா? அப்படியானால் வழக்கமாக செய்வது போன்று கொத்தமல்லி சட்னியை செய்யாமல், அந்த சட்னிக்கு சின்ன வெங்காயத்துடன், பச்சை மிளகாய், வரமிளகாய் என இரண்டையும் பயன்படுத்துங்கள். இப்படி பயன்படுத்தும் போது அந்த சட்னியின் சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இப்படி சட்னியை செய்யும் போது வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு கொத்தமல்லி சின்ன வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொத்தமல்லி சின்ன வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 15 (நறுக்கியது)
* பூண்டு - 8 பல்
* பச்சை மிளகாய் - 2
* புளி - சிறிய துண்டு
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பை சேர்த்து லேசாக பொன்னிறமாகும் வரை
வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை
சேர்த்து, வெங்காயம் நன்கு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய் மற்றும் புளியை சேர்த்து, பச்சை மிளகாய்
லேசாக நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து 1 கைப்பிடி கொத்தமல்லியை நீரில் 2 முறை அலசி சேர்த்து,
கொத்தமல்லியின் இலைகள் லேசாக சுருங்க ஆரம்பிக்கும் போது, அடுப்பை
அணைத்துவிட வேண்டும்.
* பிறகு அதில் துருவிய தேங்காயை சேர்த்து வாணலியின் சூட்டிலேயே வதக்கி
குளிர வைக்க வேண்டும்.
* அதன்பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, ஒருமுறை அரைக்க வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்து, ஒரு கிண்ணத்தில்
எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஜாரில் சிறிது நீரை ஊற்றி அலசி,
சட்னியுடன் சேர்த்து கலந்துவிட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயத்
தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான
கொத்தமல்லி சின்ன வெங்காய சட்னி தயார்.



Click it and Unblock the Notifications