Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
கொங்குநாடு வெள்ளை சோயா பிரியாணி - எப்படி செய்யணும் தெரியுமா?
Kongunadu Vellai Soya Biryani Recipe In Tamil: உங்களுக்கு மதிய வேளையில் சமைக்க பிடிக்கவில்லையா? டக்கென்று சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பிரியாணி என்றால் பிடிக்குமா? உங்கள் வீட்டில் மீல்மேக்கர் உள்ளதா?
அப்படியானால் அந்த மீல்மேக்கரைக் கொண்டு அட்டகாசமான சுவையில் கொங்குநாடு வெள்ளை பிரியாணியை செய்யுங்கள். இந்த பிரியாணி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். இந்த பிரியாணிக்கு வெங்காய பச்சடியை மட்டும் சைடு டிஷ்ஷாக வைத்துக் கொண்டே போதும். சுவை வேற லெவலில் இருக்கும்.

உங்களுக்கு கொங்குநாடு வெள்ளை சோயா பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்குநாடு வெள்ளை சோயா பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சீரக சம்பா அரிசி - 1/2 கிலோ அல்லது 3 கப் (நீரில் 20 நிமிடம் ஊற வைக்கவும்)
அரைப்பதற்கு...
* சின்ன வெங்காயம் - 15-20
* இஞ்சி - 2 இன்ச்
* பூண்டு - 15 பல்
* பச்சை மிளகாய் - 1
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 2
ஊற வைப்பதற்கு...
* மீல் மேக்கர் - 100 கிராம்
* தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* புதினா - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 1
* கல்பாசி - சிறிது
* பிரியாணி இலை - 1
* வெங்காயம் - 3 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* புதினா - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* தக்காளி - 1
* பச்சை மிளகாய் - 2
* தேங்காய் பால் - 150 மிலி
* சுடுநீர் - 5 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் சீரக சம்பா அரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின்
அதில் நீரை ஊற்றி, 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு
கொதிக்க வைத்து இறக்கி, அதில் மீல் மேக்கரை சேர்த்து 5 நிமிடம் ஊற
வைத்து, பின் அதில் உள்ள நீரை பிழிந்து எடுத்து, தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை
மிளகாய், சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து, நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் ஊற வைத்து பிழிந்த மீல் மேக்கரை எடுத்து,
அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் தயிர், உப்பு மற்றும் சிறிது புதினாவை சேர்த்து
நன்கு பிரட்டி, 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும்
தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய்,
கல்பாசி, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை
சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் புதினா, கொத்தமல்லி, தக்காளி மற்றும் பச்சை மிளகாய்
சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்துள்ள மீல் மேக்கரை சேர்த்து 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின் அதில் தேங்காய் பாலை ஊற்றி கிளறி, 5 கப் சுடுநீரை ஊற்றி, உப்பு
சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கலந்து கொதிக்க வைக்க
வேண்டும்.
* கொதி வந்ததும், அதில் ஊற வைத்துள்ள சீரக சம்பா அரிசியை சேர்த்து
கிளறி, மிதமான தீயில் வைத்து, நீர் ஓரளவு வற்றும் வரை கொதிக்க வைக்க
வேண்டும்.
* நீர் வற்றியதும், குக்கரை மூடி, குறைவான தீயில் வைத்து, 1 விசில்
விட்டு இறக்கினால், சுவையான கொங்குநாடு வெள்ளை சோயா பிரியாணி
தயார்.



Click it and Unblock the Notifications











