Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இட்லிக்கு ஏற்ற கொங்குநாடு ஸ்டைல் தக்காளி பஜ்ஜி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க...
Kongunadu Thakkali Bajji Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை தான் செய்யப் போகிறீர்களா? அதற்கு பெரும்பாலும் சட்னி அல்லது சாம்பார் தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை கொங்குநாடு ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜியை செய்யுங்கள். இதுவரை நீங்கள் தக்காளியைக் கொண்டு சட்னி தான் செய்திருப்பீர்கள். ஆனால் இந்த தக்காளி பஜ்ஜி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதம், சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.
முக்கியமாக இந்த தக்காளி பஜ்ஜி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். அதுவும் இந்த தக்காளி பஜ்ஜியை ஒருமுறை செய்தால் பின் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். அந்த அளவில் இதன் சுவை பிரமாதமாக இருக்கும். பேச்சுலர்கள் கூட இந்த ரெசிபியை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. காலையில் செய்தால், மூன்று வேளையும் வைத்து சாப்பிடலாம்.

உங்களுக்கு கொங்குநாடு ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்குநாடு ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 15 (நறுக்கியது)
* வரமிளகாய் - 2 (காரத்திற்கு ஏற்ப)
* தக்காளி - 4 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/4 கப்
செய்முறை:
* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் வரமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள்,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் 1/4 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் விட்டு
இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மத்து கொண்டு கடைந்தால், சுவையான
கொங்குநாடு ஸ்டைல் தக்காளி பஜ்ஜி தயார்.



Click it and Unblock the Notifications