Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
காரசாரமான... கொங்குநாடு ஸ்பெஷல் வரமிளகாய் சிக்கன் வறுவல்
Kongunadu Special Vara Milagai Chicken Varuval: சிக்கன் பிரியர்கள் நிறைய பேர் உள்ளனர். நீங்களும் சிக்கன் பிரியரா? சிக்கனை கொண்டு பலவிதமான ரெசிபிக்களை செய்து சாப்பிட விரும்புவீர்களா? இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் அந்த சிக்கனைக் கொண்டு கொங்குநாடு ஸ்பெஷல் வரமிளகாய் சிக்கன் வறுவலை செய்யுங்கள். இந்த வறுவல் ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். சிக்கனை எப்போதும் 65 செய்து சாப்பிடுவீர்களானால், ஒரு வித்தியாசத்திற்கு இந்த ரெசிபியை முயற்சிக்கலாம்.

உங்களுக்கு கொங்குநாடு ஸ்பெஷல் வரமிளகாய் சிக்கன் வறுவல் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்குநாடு ஸ்பெஷல் வரமிளகாய் சிக்கன் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1/2 கிலோ
* தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 10 (விதை நீக்கிக் கொள்ளவும்)
* கறிவேப்பிலை - சிறிது
* பூண்டு - 5 பல் (தட்டிக் கொள்ளவும்)
* சின்ன வெங்காயம் - 1 கப் (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, நீரில் நன்கு
கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய்
சேர்த்து சூடானதும், வரமிளகாய், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து குறைவான
தீயில் வைத்து 30 நொடிகள் வதக்க வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து சில நிமிடங்கள் மென்மையாகும்
வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம்
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு ஒருசேர கிளறி
விட வேண்டும்.
* பின் அதில் 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து சிக்கனை 30
நிமிடம் குறைவான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
* குறைவான தீயில் வைத்து நீர் சுண்டும் வரை சிக்கனை வேக வைத்து
இறக்கினால், சுவையான கொங்குநாடு ஸ்பெஷல் வரமிளகாய் சிக்கன் வறுவல்
தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications