Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
சாதத்திற்கு அட்டகாசமாக இருக்கும்... கொங்குநாடு ஸ்டைல் பருப்பு குழம்பு
Kongunadu Paruppu Kuzhambu: இன்று என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லையா? அப்படியானால் உங்கள் வீட்டில் கொங்குநாடு ஸ்டைல் பருப்பு குழம்பை செய்யுங்கள்.
இந்த பருப்பு குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது 10 நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில் மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு கொங்குநாடு ஸ்டைல் பருப்பு குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்குநாடு ஸ்டைல் பருப்பு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பருப்பு வேக வைப்பதற்கு...
* துவரம் பருப்பு - 1/4 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* விளக்கெண்ணெய் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
குழம்பிற்கு...
* கடலை எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - 3 பல்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - 1 நெல்லிக்காய் அளவு
* சுடுநீர் . 1/2 கப்
* நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் புளியை சுடுநீரில் போட்டு 15 நிமிடம் ஊற வைத்து, பின்
அதை பிசைந்து சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை எடுத்து, அதில் துவரம் பருப்பைக் கழுவிப்
போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் விளக்கெண்ணெய்
சேர்த்து, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கிக்
கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலை எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு பற்களை தட்டிப் போட்டு, கறிவேப்பிலை மற்றும்
வரமிளகாயைப் போட்டு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு, தேவையான அளவு உப்பு தூவி
3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து, அதில் புளிச்சாற்றினை ஊற்றி, சில நிமிடங்கள் கொதிக்க வைக்க
வேண்டும்.
* இறுதியாக அதில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து கிளறி, 2 நிமிடம்
கொதிக்க வைத்து, மேலே சிறிது நெய்யை ஊற்றி இறக்கினால், சுவையான
கொங்குநாடு பருப்பு குழம்பு தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications











