Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
கொங்குநாடு மட்டன் குழம்பு
உங்களுக்கு கொங்குநாடு மட்டன் ரெசிபிக்களை சுவைக்க ஆசையாக உள்ளதா? அப்படியானால் உங்கள் வீட்டிலேயே கொங்குநாடு மட்டன் குழம்பு செய்து சுவையுங்கள். இந்த குழம்பு இருவேறு மசாலாக்களைத் தயாரித்து செய்யக்கூடியதாகும்.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உணவுகள் தனித்துவமான சுவையுடன் இருக்கும். அதிலும் அசைவ உணவுகளை எடுத்துக் கொண்டால், செட்டிநாடு, கொங்குநாடு ஸ்டைல் உணவுகள் மிகவும் சூப்பராக இருக்கும். நீங்கள் இதுவரை கொங்குநாடு ரெசிபிக்களை சுவைத்ததில்லையா? உங்களுக்கு கொங்குநாடு மட்டன் ரெசிபிக்களை சுவைக்க ஆசையாக உள்ளதா? அப்படியானால் உங்கள் வீட்டிலேயே கொங்குநாடு மட்டன் குழம்பு செய்து சுவையுங்கள். இந்த குழம்பின் ஸ்பெஷலே இருவேறு மசாலாக்களைத் தயாரித்து செய்யக்கூடியதாகும்.

உங்களுக்கு கொங்குநாடு மட்டன் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு
தேவையான பொருட்கள்:
* மட்டன் - 1/2 கிலோ
சிவப்பு மசாலா செய்வற்கு...
* சின்ன வெங்காயம் - 2 1/2 கப்
* வரமிளகாய் - 7
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மல்லி - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கசகசா - 1/4 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* பூண்டு - 6 பல்
* இஞ்சி - 1 சிறிய துண்டு (விருப்பமிருந்தால்)
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
வெள்ளை மசாலா செய்வதற்கு...
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்
* பூண்டு - 2 பல்
* தண்ணீர் - அரைப்பதற்கு தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 4 ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் - 3 ஸ்பூன் (துண்டுகளாக்கப்பட்டது)
செய்முறை:
* முதலில் சிவப்பு மசாலா தயாரிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயத்தைப் போட்டு 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, சோம்பு, மல்லி விதைகள், சீரகம், கசகசா, பட்டை, வரமிளகாய் சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வேண்டுமானால் இஞ்சியை சேர்த்து சில நிமிடங்கள் குறைவான தீயில் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, நீர் சேர்க்காமல் நன்கு மென்மையாக அரைத்து தனியாகக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, நறுக்கிய பெரிய வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம் வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் கழுவிய மட்டனை சேர்த்து உப்பு தூவி, மட்டன் நிறம் மாறி பெரிதாகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள சிவப்பு மசாலா விழுதை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.
* அதன்பின் அதில் மட்டன் மூழ்கும் வரையான தண்ணீர் ஊற்றி, வாணலியை மூடி வைத்து 1/2 மணிநேரம் நன்கு மட்டனை வேக வைக்க வேண்டும். (அவ்வப்போது மூடியைத் திறந்து மட்டனில் நீர் உள்ளதாக என்பதை பார்த்துக் கொள்ள மறக்க வேண்டாம்)
* அதற்குள் வெள்ளை மசாலாவை தயாரித்துக் கொள்ளலாம். அதற்கு மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், பூண்டு, பொட்டுக்கடலை, சிறிது நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
* மட்டன் நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள வெள்ளை மசாலா மற்றும் தேங்காய் துண்டுகளை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பும் சேர்த்து கிளறி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கொங்குநாடு மட்டன் மசாலா தயார்.
Image Courtesy: famousindianrecipes



Click it and Unblock the Notifications