Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
கொங்குநாடு கத்திரிக்காய் பஜ்ஜி ரெசிபி... இப்படி செஞ்சு பாருங்க... இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும்...
Kongunadu Kathirikkai Bajji Recipe in Tamil: இட்லி, தோசைக்கு சைடிஷ் என்றால் எப்போதும் முதலில் நினைவிற்கு வருவது சட்னிதான். சட்னியிலும் பெரும்பாலும் ஒரே மாதிரியான சட்னிகளைத்தான் நாம் அரைப்போம். இது காலப்போக்கில் சலிப்பை ஏற்படுத்தும். வழக்கமான தேங்காய், தக்காளி சட்னிக்குப் பதிலாக புதிய சட்னிகளை முயற்சிக்க விரும்புபவர்கள் காய்கறிகளில் சட்னி அரைக்க முயற்சிக்கலாம்.
காய்கறிகளை வைத்து சைடிஷ் செய்வது என்று வரும்போது அதில் முதலிடத்தில் இருப்பது கத்திரிக்காய்தான். கத்திரிக்காயை வைத்து ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு விதமான சைடிஷ் செய்வார்கள். அந்த வகையில் கொங்கு பகுதிகளில் கத்திரிக்காயை வைத்து 'கத்திரிக்காய் பஜ்ஜி' என்று ஒரு சூப்பரான சைடிஷை செய்வார்கள். இது இட்லி, தோசைக்கு மிகவும் சூப்பரான சைடிஷாக இருக்கும். உருளைக்கிழங்கு சேர்த்து செய்யப்படும் இந்த கத்திரிக்காய் பஜ்ஜியின் சுவை மிகவும் வித்தியாசமானது மற்றும் தனித்துவமானது. கத்திரிக்காயை இதுபோல செய்து கொடுக்கும் போது கத்திரிக்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்த கொங்கு ஸ்டைல் கத்திரிக்காய் பஜ்ஜி இட்லி, தோசைக்கு வித்தியாசமான சைடிஷாக இருக்கும். உங்களுக்கு கொங்கு ஸ்டைல் கத்திரிக்காய் பஜ்ஜியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்கு ஸ்டைல் கத்திரிக்காய் பஜ்ஜி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது)
- 2 டீஸ்பூன் கடலை எண்ணெய்
- 2 பழுத்த தக்காளி(பொடியாக நறுக்கியது)
- 3 பச்சை மிளகாய்
- 1 டீஸ்பூன் மஞ்சள்
- தேவையான அளவு உப்பு
- 1 உருளைக்கிழங்கு(தோல் நீக்கி நறுக்கியது)
- கால் கிலோ கத்திரிக்காய்(பொடியாக நறுக்கியது)
- கால் டீஸ்பூன் சர்க்கரை
செய்முறை:
- ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி காயவைத்து, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும். பின்னர் நறுக்கிய பச்சை மிளகாயை சேர்க்கவும்.
- பின்னர் தக்காளி மற்றும் உப்பை சேர்த்து வதக்கவும். அதன்பின் மஞ்சள் தூள் சேர்க்கவும். தக்காளி நன்கு குலையும் வரை 2 நிமிடங்கள் வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் நறுக்கிய கத்திரிக்காயைச் சேர்க்கவும். பின் தேவையான அளவு தண்ணீரைச் சேர்க்கவும்.தண்ணீர் கொதித்ததும் கால் ஸ்பூன் சர்க்கரையையும் சேர்க்கவும்.
- இறுதியாக குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வேக விடவும்.
- அடுப்பை அணைத்துவிட்டு, குக்கரில் உள்ள அழுத்தம் தானாகவே குறையும் வரை காத்திருக்கவும். குக்கரைத் திறந்து, சட்னியை ஒரு பருப்பு மத்து கொண்டு நன்றாக மசிக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான கொங்குநாடு கத்திரிக்காய் பஜ்ஜி ரெடி, இதை சூடான இட்லி, தோசையுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications