Latest Updates
-
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
கொங்குநாடு ஸ்டைல் சேனைக்கிழங்கு மசாலா
உங்கள் வீட்டில் சேனைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அந்த சேனைக்கிழங்கு கொண்டு மசாலா செய்யுங்கள். அதுவும் கொங்குநாடு ஸ்டைல் சேனைக்கிழங்கு மசாலாவை செய்து சாப்பிடுங்கள்.
இன்று மதியம் உங்கள் வீட்டில் என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சேனைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அந்த சேனைக்கிழங்கு கொண்டு மசாலா செய்யுங்கள். அதுவும் கொங்குநாடு ஸ்டைல் சேனைக்கிழங்கு மசாலாவை செய்து சாப்பிடுங்கள். இது சாதத்திற்கு அற்புதமான சைடு டிஷ்ஷாக இருக்கும். மேலும் இதை செய்வதும் மிகவும் சுலபம். பேச்சுலர்கள் கூட இந்த மசாலாவை முயற்சிக்கலாம்.

உங்களுக்கு கொங்குநாடு ஸ்டைல் சேனைக்கிழங்கு மசாலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்குநாடு ஸ்டைல் சேனைக்கிழங்கு மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சேனைக்கிழங்கு - 250 கிராம்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
மசாலாவிற்கு...
* கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 இன்ச்
* கிராம்பு - 2
* பூண்டு - 6 பல்
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 5
* சோம்பு - 1 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
தாளிப்பதற்கு...
* கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் சேனைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, நன்கு கழுவி, சிறு சிறு நீளத் துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் சேனைக்கிழங்கு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 5-7 நிமிடம் கிழங்கை வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், சேனைக்கிழங்கைப் போட்டு 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து ப்ரை செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, பூண்டு, இஞ்சி, வரமிளகாய், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து சில நொடிகள் நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காய், கசகசா, மல்லித் தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து அதை மிக்சர் ஜாரில் போட்டு, 1 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த மசாலா மற்றும் சேனைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில் வைத்து, மசாலா நன்கு சேனைக்கிழங்குடன் சேரும் வரை வதக்கி இறக்கினால், சுவையான கொங்குநாடு ஸ்டைல் சேனைக்கிழங்கு மசாலா தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications