Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
1 கப் ராகி மாவு இருக்கா? அதோடு இந்த 4 பொருளை சேர்த்து எண்ணெயில் பொரிச்சு சாப்பிடுங்க..
Kongunad Special Ragi Pakoda Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் திடீரென்று சாப்பிட ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் ராகி மாவு உள்ளதா? அப்படியானால் அந்த ராகி மாவைக் கொண்டு அட்டகாசமான சுவையில் பங்கோடா செய்யுங்கள்.
அதுவும் கொங்குநாடு ஸ்டைலில் செய்து கொடுங்கள். நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள். ராகி உடலுக்கு மிகவும் நல்லது. ராகியில் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தங்களின் உணவில் அவ்வப்போது ராசியை சேர்ப்பது நல்லது.

உங்களுக்கு கொங்குநாடு ஸ்பெஷல் ராகி பக்கோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்குநாடு ஸ்பெஷல் ராகி பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ராகி மாவு - 1 கப்
* வேர்க்கடலை - 1/4 கப்
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் வேர்க்கடலை, பொட்டுக்கடலை ஆகியவற்றை
சேர்த்து நன்கு பொடி செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பௌலில் ராகி மாவு மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியை
சேர்த்து, 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கையால் கிளறி விட வேண்டும்.
* பின்பு சிறிது உப்பு மற்றும் வெங்காயம், பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு கையால் பிசைய வேண்டும்.
* பின் சிறிது நீரைத் தெளித்து பக்கோடா பதத்திற்கு உதிரி உதிரியாக
பிசைந்து கொள்ள வேண்டும். (அதிக நீரை ஊற்றிவிட வேண்டாம். பின் பக்கோடா
போட முடியாமல் போய்விடும்.)
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தயாரித்து வைத்துள்ள மாவை கொஞ்சம்
கொஞ்சமாக எடுத்து உருட்டி எண்ணெயில் போட்டு மிதமான தீயில் வைத்து 2-3
நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும்
பொரித்து எடுத்தால், சுவையான கொங்குநாடு ஸ்பெஷல் ராகி பக்கோடா
தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications