Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
இட்லிக்கு ஒருமுறை இந்த ஸ்டைலில் மட்டன் குழம்பு செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Kongu Style Mutton Kuzhambu Recipe In Tamil: விடுமுறை நாட்கள் வந்தாலே, அதுவும் சன்டே வந்தாலே அனைவரது வீட்டிலும் காலையில் இருந்து இரவு வரை மூன்று வேளையும் அசைவ உணவு தான் இருக்கும். அதுவும் காலை வேளையில் இட்லியை வேக வைத்து, அதற்கு மட்டன் குழம்பு செய்து சாப்பிட்டால் தான் பலருக்கு சன்டே வந்த ஃபீல் இருக்கும். உங்களும் அப்படி தானா?
உங்கள் வீட்டிலும் சன்டே வந்தாலே இட்லி செய்து மட்டன் குழம்பு செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே ஸ்டைலில் தான் மட்டன் குழம்பு செய்வீர்களா? அப்படியானால் இந்த வாரம் கொங்கு ஸ்டைல் மட்டன் குழம்பு செய்யுங்கள். இது இன்னும் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு கொங்கு ஸ்டைல் மட்டன் குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்கு ஸ்டைல் மட்டன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மட்டன் வேக வைப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மட்டன் - 1/2 கிலோ
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சிறிது
வதக்கி அரைப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 1 கப்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பட்டை - 1 துண்டு
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* பெரிய தக்காளி - 1
* தனி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* கறிமசாலா தூள் - 2 டீஸ்பூன்
குழம்பிற்கு..
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* அன்னாசிப்பூ - 1
* வரமிளகாய் - 1
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் பால் - 1 கப்
செய்முறை:
* முதலில் மட்டன் வேக வைப்பதற்கு குக்கரை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி,
மட்டனை சேர்த்து, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு
கிளறி, மட்டன் நீர் விட்டு வரும் வரை வேக வைக்க வேண்டும்.
* மட்டனில் இருந்து நீர் வந்ததும், அதில் மட்டன் மூழ்கும் அளவில் நீரை
ஊற்றி, குக்கரை மூடி, 6-7 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் பட்டை, சோம்பு, சீரகம், மிளகு சேர்த்து 2 நிமிடம் கிளறி
விட வேண்டும்.
* அதன் பின் பெரிய தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின் மிளகாய் தூள், மல்லித் தூள், கறிமசாலா தூள் சேர்த்து நன்கு 2
நிமிடம் கிளறி இறக்கி குளிர வைத்து, மிக்சர்ஜாரில் போட்டு, சிறிது
நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ சேர்த்து தாளித்து, பின் வரமிளகாய்,
வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 2 நிமிடம் கிளறி,
சிறிது நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு வேக வைத்துள்ள மட்டனை நீருடன் அப்படியே சேர்த்து கிளறி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கி விட
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் தேங்காய் பாலை ஊற்றி
கிளறி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான கொங்கு ஸ்டைல் மட்டன்
குழம்பு தயார்.
Image Courtesy: Kannamma Cooks



Click it and Unblock the Notifications











