Latest Updates
-
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம்
இட்லிக்கு தக்காளியை வெச்சு இப்படி குழம்பு செஞ்சா.. மட்டன் குழம்பே தோத்துப் போயிடும்...
Kongu Special Tomato Kuzhambu: இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி செய்ய போகிறீர்களா? அந்த இட்லிக்கு சட்னி செய்ய நினைக்கிறீர்களா? இன்று இட்லிக்கு சட்னி செய்யாமல் ஒரு சுவையான குழம்பு செய்யுங்கள். அதுவும் கொங்கு ஸ்டைல் தக்காளி குழம்பை செய்யுங்கள். இந்த தக்காளி குழம்பு இட்லியுடன் மட்டுமின்றி தோசையுடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும்.
முக்கியமாக இது வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் வேகமாக செய்வதற்கு ஏற்றவாறு ஈஸியாக இருக்கும். அதோடு இந்த தக்காளி குழம்பு குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இந்த குழம்பை செய்து கொடுத்தால், ஒரு இட்லி சாப்பிடும் உங்கள் குழந்தை இன்னொரு இட்லியை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு கொங்கு ஸ்பெஷல் தக்காளி குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்கு ஸ்பெஷல் தக்காளி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலா பேஸ்ட்டிற்கு...
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)
* பூண்டு - 5 பல்
* கறிவேப்பிலை - சிறிது
* கனிந்த தக்காளி - 4-5
* உப்பு - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், மல்லி, மிளகு, வரமிளகாய் சேர்த்து
லேசாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு
பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் தூள்
சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய தேங்காயை சேர்த்து 5 நிமிடம் வதக்கி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பிறகு வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை மற்றும்
வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அதன் பின் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, 1 கப் நீரை ஊற்றி கிளறி,
குறைவான தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், கொங்கு
ஸ்பெஷல் தக்காளி குழம்பு தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications











