Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
கொங்கு ஸ்பெஷல் கொரடா துவையல் ரெசிபி... 10 நிமிஷம் போதும்... சாதத்துடன் பிசைந்து சாப்பிட செம சைடிஷ் ரெடி..!
Kongu Special Korada Thuvaiyal Recipe in Tamil: தினமும் சாம்பார், புளிக்குழம்பு செய்து போரடித்து விட்டதா? சாதத்திற்கு மிகவும் எளிதான அதேசமயம் சுவையான ஒரு சைடிஷை செய்ய விரும்புகிறீர்களா? 10 நிமிடத்தில் ஒரு அருமையான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் சற்று காரமாக மற்றும் புளிப்பான சைடிஷ் வேண்டுமா? அப்படியானால் உங்கள் வீட்டில் சின்ன வெங்காயமும், தேங்காயும் இருந்தால், அவற்றை வைத்து கொங்கு ஃபேமஸ் கொரடா துவையலை செய்யுங்கள்.
இந்த கொங்கு ஸ்பெஷல் துவையல் 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு மிகவும் சுலபமாக இருக்கும். அதோடு, இந்த சட்னியை சூடான சாதத்தில் போட்டு, கொஞ்சம் நெய் ஊற்றி சாப்பிட்டால் இதற்கு வேறு சைடிஷே தேவையில்லை, சுவை அவ்வளவு அருமையாக இருக்கும். இந்த துவையலை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒருமுறை செய்து கொடுத்தால், அடிக்கடி செய்து கொடுக்க சொல்லி கேட்பார்கள்.

உங்களுக்கு கொங்கு ஸ்பெஷல் கொரடா துவையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்கு ஃபேமஸ் கொரடா துவையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- சின்ன வெங்காயம் - 20
- துருவிய தேங்காய் - அரை மூடி
- பச்சை மிளகாய் - 5
- கறிவேப்பிலை - 1 கொத்து
- புளி - சிறிதளவு
- சீரகம் - அரை ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- கொங்கு ஸ்பெஷல் கொரடா துவையலை செய்வதற்கு முதலில் சின்ன வெங்காயத்தை கழுவி தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு மிக்சி ஜாரில் உரித்த சின் வெங்காயம், துருவிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் புளி என அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்க்கவும்.
- பின்னர் சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.
- இந்த கலவையை தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைக்கவும்.
- பின்னர் இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- இந்த துவையலை சூடான சாதத்தில் போட்டு 1 ஸ்பூன் நெய் அல்லது 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.
- குழம்பு வைக்க நேரமில்லாத தருணத்தில் இந்த துவையலை முயற்சி செய்து பாருங்கள். சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications