Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
கொங்குநாடு கோழிக்குழம்பு ரெசிபி... இந்த மாதிரி சிக்கன் குழம்பு வையுங்க...இட்லி, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்!
Kongu Nadu Chicken Kulambu Recipe in Tamil: சன்டே வந்தாலே அனைவரின் வீட்டிலும் அசைவ உணவுதான் என்பது எழுதப்படாத விதியாக மாற்றிவிட்டது. வாரம் முழுவதும் அசைவம் சாப்பிட்டால் கூட சன்டே அன்று வீட்டில் சமைத்து சாப்பிடும் அசைவம் உணவுகள் கூடுதல் ஸ்பெஷல்தான். பலருக்கு காலையில் இட்லியுடன், அசைவ குழம்பைசேர்த்து சாப்பிட்டால்தான் சன்டேவே தொடங்கும். அதிலும் இட்லி, சிக்கன் குழம்பு என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்த காம்போவாகும்.
உங்கள் வீட்டிலும் சன்டே வந்தாலே இட்லி செய்து சிக்கன் குழம்பு செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே ஸ்டைலில் தான் சிக்கன் குழம்பு செய்வீர்களா? அப்படியானால் இந்த வாரம் கொங்கு ஸ்டைல் கோழின் குழம்பு செய்யுங்கள். இது இட்லி மட்டுமின்றி சாதத்துடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு கொங்கு நாடு கோழி குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்கு நாடு கோழி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 4 பூண்டு பல்
- 1 ஸ்பூன் சோம்பு
- 1 இன்ச் இலவங்கப்பட்டை
- 2 கிராம்பு
- 3 ஸ்பூன் கசகசா
- 1 சிறிய துண்டு இஞ்சி
வறுத்து அரைக்க:
- 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
- 1 டேபிள்ஸ்பூன் மிளகு
- அரை டேபிள்ஸ்பூன் சீரகம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி விதைகள்
- 3 வர மிளகாய்
- 2 பெரிய வெங்காயம், நறுக்கியது
குழம்பு வைக்க:
- 3 ஸ்பூன் எண்ணெய்
- 1/2 கப் சின்ன வெங்காயம்
- 3 கொத்து கறிவேப்பிலை
- 2 நடுத்தர தக்காளி, நறுக்கியது
- 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
- 1/2 கிலோ கோழிக்கறி
செய்முறை:
- முதலில் அரைக்க கொடுத்துள்ள இஞ்சி, பூண்டு உட்பட பொருட்களை முடிந்த அளவிற்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அதில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி விதைகள் மற்றும் வர மிளகாய் சேர்த்து, மிதமான தீயில் ஒரு நிமிடம் வறுக்கவும்.
- பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து, வெங்காயம் லேசாகப் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
- இதை ஒரு மிக்சி ஜாருக்கு மாற்றி விடவும். மேலும் கடாயில் உள்ளவற்றை சிறிதளவு தண்ணீர் ஊற்றி அலசி அதையும் மிக்சி ஜாரில் ஊற்றவும்.
- மேலும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அதில் 3 கொத்து கறிவேப்பிலை மற்றும் சின்ன வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடி போல நிறம் மாறும் வரை வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய தக்காளியையும் மஞ்சளையும் சேர்த்து, தக்காளி நன்கு வெந்து குழையும் வரை வதக்கவும்.
- தக்காளி வெந்ததும், அரைத்த இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு வாசனை போகும் வரை வதக்கவும்,
- பச்சை வாசனை போனதும் வறுத்த அரைத்த மசாலா விழுதை சேர்த்து நன்கு கிளறவும்.
- பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். அதன்பின் எலும்புடன் கூடிய சிக்கன் துண்டுகளைச் சேர்க்கவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கொதிக்க விடவும். அடிப்பிடிக்காமல் இருக்க, ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒருமுறை குழம்பைக் கிளறி விடவும்.
- 30 நிமிடம் நன்றாக வெந்தவுடன் கடைசியாக உப்பு சரிபார்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை அணைத்தால் சுவையான கொங்கு நாடு கோழிக் குழம்பு ரெடி!



Click it and Unblock the Notifications