2 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி கொண்டைக்கடலை மசாலா வடை செய்யுங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும்

Posted By:

Kondakadalai Masal Vadai Recipe in Tamil: ஆயுதபூஜைக்கு அனைவரின் வீட்டிலும் நிச்சயம் சுண்டல் செய்திருப்போம். அதற்காக வாங்கிய சுண்டல் நிச்சயம் மீதமிருக்கும். அவ்வளவு சுண்டலையும் வேகவைத்து சாப்பிட முடியாதல்லவா? அப்படியென்றால் அந்த சுண்டலை வைத்து மொறுமொறுனு ஒரு சூப்பரான வடையை செய்யுங்க. உளுந்தம்பருப்பு அல்லது கடலைப்பருப்பை வைத்துதான் பொதுவாக வடை செய்வோம், ஆனால் சுண்டலை வைத்தும் சூப்பரான வடையை செய்யலாம்.

Kondakadalai Masal Vadai Recipe How to Make at Home in Tamil

இந்த சுண்டல் வடை சுவையானது மட்டுமல்ல மிகவும் ஆரோக்கியமானதும் கூட. ஒரே மாதிரியான வடை சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு இந்த வடை புதிய அனுபவத்தைக் கொடுக்கும். இந்த ஆரோக்கியமான வடையை செய்வதும் எளிதானதாகும்.

உங்களுக்கு சுண்டலை வைத்து எப்படி வடை செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுண்டல் வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைக்க வேண்டியவை:

ஊறவைத்த சுண்டல் - 2 கப்
சோம்பு - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
பூண்டு - 5 பல்
இஞ்சி - 1 இன்ச்

பிற பொருட்கள்:

அரிசி மாவு - 1 ஸ்பூன்
வெங்காயம், பொடியாக நறுக்கியது - 1/2 கப்
கொத்தமல்லி தழை, பொடியாக நறுக்கியது - 1/4 கப்
துருவிய கேரட் - 1/4 கப்
கறிவேப்பிலை, பொடியாக நறுக்கியது - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு

செய்முறை:

- சுண்டலை இரவு முழுவதும் அல்லது 6-8 மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு, நீரை முழுமையாக வடித்துவிட்டு, அதனுடன் அரைக்க வேண்டிய மற்ற பொருட்களை சேர்த்து, சற்று கொரகொரப்பான விழுதாக அரைத்துக்கொள்ளவும். அரைக்கும்போது மிகக் குறைந்த அளவு தண்ணீர் தெளிக்கவும்.

- அரைத்த பிறகு, மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும். அதனுடன் உப்பு, பெருங்காயம், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் துருவிய கேரட் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

- பின்னர் மாவை சின்ன சின்ன உருண்டைகளாக பிரித்து தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.

- பொரிப்பதற்கு ஏற்ற ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். எண்ணெய் நன்றாகச் சூடானதும், ஒரு உருண்டையை எடுத்து உள்ளங்கையில் வைத்து லேசாக அழுத்தி, சூடான எண்ணெயில் போடவும்.

- முதலில் ஒரு வடையை மட்டும் பொரித்து எடுத்து, உப்பு மற்றும் மசாலாப் பொருட்கள் சரியாக உள்ளனவா என்று சரிபார்க்கவும். தேவைப்படும் கூடுதல் மசாலாவை மாவில் சேர்த்து கலக்கவும்.

- அதேபோல மீதமுள்ள மாவையும் சின்ன சின்ன உருண்டைகளாக பிரித்து ஒவ்வொன்றாக பொரித்தெடுக்கவும்.

- பொரித்தெடுத்த வடைகளை எண்ணெயிலிருந்து எடுத்து டிஸ்யூ பேப்பரில் போட்டு எண்ணெயை நீக்கவும்.

- அவ்வளவுதான் சூப்பரான சுண்டல் வடை ரெடி. இதை சூடான டீ அல்லது காபியுடன் சாப்பிடவும்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, October 20, 2026, 22:14 [IST]
Desktop Bottom Promotion