Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
1 கைப்பிடி கொண்டைக்கடலை வெச்சு.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும்.. சத்தானதும் கூட...
Kondakadalai Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் தினமும் இட்லி, தோசை செய்வீர்களா? அந்த இட்லி, தோசைக்கு பெரும்பாலும் ஒரே மாதிரியான சைடு டிஷ் தான் செய்வீர்களா? குறிப்பாக சட்னியை அதிகம் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை சற்று வித்தியாசமாக கொண்டைக்கடலை வைத்து சட்னி செய்யுங்கள்.
இந்த சட்னி வித்தியாசமான சுவையுடன் இருப்பதோடு, புரோட்டீன் அதிகம் நிறைந்தது. கொண்டைக்கடலை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இப்படி சட்னி செய்து கொடுக்கும் போது, விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சட்னி, இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு கொண்டைக்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொண்டைக்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கொண்டைக்கடலை - 1 கைப்பிடி
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* பச்சை மிளகாய் - 3
* பூண்டு - 3 பல்
* இஞ்சி - 1 இன்ச்
* சின்ன வெங்காயம் - 10
* வறுத்த வேர்க்கடலை - 2 கைப்பிடி
* கறிவேப்பிலை - சிறிது
* புதினா - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* புளி - 1 எலுமிச்சை அளவு
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் 1 கைப்பிடி கொண்டைக்கடலையை இரவு தூங்கும் முன் நீரில் ஊற
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மறுநாள் காலையில் ஊற வைத்த கொண்டைக்கடலையை குக்கரில் போட்டு,
நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பச்சை
மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வறுத்த வேர்க்கடலை சேர்த்து சிறிது நேரம் வறுக்க
வேண்டும்.
* பிறகு கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி சேர்த்து சிறிது நேரம் வதக்க
வேண்டும்.
* பின் அதில் புளியை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.ர
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன்
துருவிய தேங்காய், சுவைக்கேற்ப உப்பு, வேக வைத்த கொண்டைக்கடலையை
நீருடன் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து, தேவையான அளவு நீரை
ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை,
வரமிளகாய் சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான
கொண்டைக்கடலை சட்னி தயார்.



Click it and Unblock the Notifications