Just In
- 25 min ago இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- 2 hrs ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 3 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 5 hrs ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
Don't Miss
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
குஜராத்தி ஸ்பெஷலான பேசன் காந்த்வி எப்படி செய்யறதுன்னு பாக்கலாமா?-செம்ம டேஸ்டி ரெசிபி!!
பேசன் காந்த்வி என்பது கடலைமாவில் செய்யக் கூடிய சுவையான ஸ்நேக்ஸ் வகையாகும். குஜராத் ஸ்பெஷலான இந்த ரெசிபியை எப்படி செய்வது என பார்க்கலாம்.
பேசன் காந்த்வி மிகவும் பிரபலமான குஜராத்தி ரெசிபி ஆகும். இது
மிகவும் சுவை
மிகுந்த ஸ்நாக்ஸ் ஆகும். இது எளிதில் எல்லாருக்கும் பிடிக்கக் கூடிய
ஸ்நாக்ஸ் ஆகும். ஏனெனில் இது பார்ப்பதற்கு அழகாகவும் மிருதுவாகவும்
இருப்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதை செய்வதற்கு கடலை மாவு மற்றும் தயிர் இருந்தால் போதும். இதை ஈஸியாக வீட்டிலே செய்து அசத்தலாம். செலவு மற்றும் நேரம் குறைந்த ஸ்நாக்ஸ் என்பதால் நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு சைடிஸ் ஆக புதினா கொத்தமல்லி சட்னி அல்லது கெட்ச்அப் சுவையாக இருக்கும். இந்த ஸ்நாக்ஸ் உங்கள் மாலை நேர தேநீர் வேளைக்கு அருமையானது. என்னங்க இப்பவே சாப்பிடும் போல தோணுகிறதா? சரி வாங்க முதல்ல இத எப்படி செய்யலாம் என பார்ப்போம்.
கந்த்வி ரெசிபி வீடியோ
Recipe By: ப்ரியங்கா த்யாகி
Recipe Type: ஸ்நாக்ஸ்
Serves: 4 பேர்
-
கடலை மாவு - 1 கப்
தயிர் - 1/2 கிலோ கிராம்
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
ஆயில் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 5-6
நறுக்கிய கொத்தமல்லி இலை - 4 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் - 4 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
-
1. தயிரை ஒரு பெளலில் ஊற்றி நன்றாக கலக்கியை பயன்படுத்தி க்ரீம் மாதிரி
அடித்துக் கொள்ளவும்.
2. இதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
3. பிறகு இதில் கடலைமாவு சேர்த்து கலந்து மென்மையான பேட்டர் தயாரிக்கவும்.
4. வாணலியில் கடாயை வைத்து மிதமான தீயில் இந்த பேட்டர் மாவை கலக்க
வேண்டும். இதை கட்டிகள் விழாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். மாவானது
கெட்டியான பதம் வரும் வரை கிளற வேண்டும்.
5. பிறகு ஒரு தட்டின் பின்புறத்தில் எண்ணெய் விட்டு அதில் இந்த மாவு
பேஸ்ட்டை தட்டையான கரண்டி கொண்டு பரப்ப வேண்டும்.
6. 5 நிமிடங்கள் குளிர வைக்கவும்.
7. பிறகு ஒரு கத்தியால் 2 அங்குலம் அளவிற்கு நேர் நேராக வெட்ட வேண்டும்.
8. இதன் மேல் துருவிய தேங்காய், கொத்தமல்லி இலைகளை பரப்பி விட வேண்டும்.
9. இப்பொழுது ஒவ்வொரு வெட்டின பகுதியையும் தனித்தனியாக வெடிப்பில்லாமல்
ரோல் செய்ய வேண்டும். இது தான் ஹான்வி.
10. ஒரு வாணலியில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட
வேண்டும். கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை போட்டு தாளித்து அதை அப்படியே
ஹான்வி மேல் ஊற்றி விட வேண்டும்.
11. கடைசியில் கொத்தமல்லி இலை மற்றும் தேங்காய் துருவல் கொண்டு
அலங்கரித்தால் சுவையான கலர்புல்லான காந்த்வி ரெடி.
- 1. தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி இலைகளை கலந்து வைத்துக் கொண்டால் ஈஸியாக இருக்கும்.
- 2. மாவு பேஸ்ட் பதத்தை பார்ப்பதற்கு சிறிது பேஸ்ட்டை தட்டில் பரப்பி குளிர்ந்த பிறகு ரோல் செய்து பார்த்துக் கொள்ளவும்.
- ஹான்வி ரோல் எண்ணிக்கை - 15
- கலோரிகள் - 94 cal
- கொழுப்பு - 4.5 கிராம்
- புரோட்டீன் - 3.8 கிராம்
- கார்போஹைட்ரேட் - 9.4 கிராம்
- நார்ச்சத்து - 2.5 கிராம்
செய்முறை :
1. தயிரை ஒரு பெளலில் ஊற்றி நன்றாக கலக்கியை பயன்படுத்தி க்ரீம்
மாதிரி
அடித்துக் கொள்ளவும்.
2. இதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
3. பிறகு இதில் கடலைமாவு சேர்த்து கலந்து மென்மையான பேட்டர் தயாரிக்கவும்.
4. வாணலியில் கடாயை வைத்து .
5.மிதமான தீயில் இந்த பேட்டர் மாவை கலக்க வேண்டும். இதை கட்டிகள் விழாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். மாவானது கெட்டியான பதம் வரும் வரை கிளற வேண்டும்.
6. பிறகு ஒரு தட்டின் பின்புறத்தில் எண்ணெய் விட்டு அதில் இந்த
மாவு
பேஸ்ட்டை தட்டையான கரண்டி கொண்டு பரப்ப வேண்டும்.
7. 5 நிமிடங்கள் குளிர வைக்கவும்.
8. பிறகு ஒரு கத்தியால் 2 அங்குலம் அளவிற்கு நேர் நேராக வெட்ட வேண்டும்.
9. இதன் மேல் துருவிய தேங்காய், கொத்தமல்லி இலைகளை பரப்பி விட வேண்டும்.
10. இப்பொழுது ஒவ்வொரு வெட்டின பகுதியையும் தனித்தனியாக
வெடிப்பில்லாமல்
ரோல் செய்ய வேண்டும். இது தான் காந்த்வி.
11. ஒரு வாணலியில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு
போட
வேண்டும்.
12. கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை போட்டு தாளித்து அதை
அப்படியே
காந்த்வி மேல் ஊற்றி விட வேண்டும்.
13. கடைசியில் கொத்தமல்லி இலை மற்றும் தேங்காய் துருவல் கொண்டு
அலங்கரித்தால் சுவையான கலர்புல்லான காந்த்வி ரெடி.