Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
1 கப் ராகி மாவு இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை செஞ்சு சாப்பிடுங்க.. மொறுமொறுன்னு செமயா இருக்கும்..
Kezhvaragu Pakoda Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் சாப்பிட மொறுமொறுவென்று ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் பிள்ளைகளுக்கு சத்தான அதே சமயம் ருசியான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ராகி மாவு உள்ளதா?
அப்படியானால் அந்த ராகி மாவைக் கொண்டு, காபி, டீ போடும் நேரத்திற்குள் மொறுமொறுப்பான பக்கோடாவை செய்யுங்கள். இந்த ராகி பக்கோடா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு ராகி பக்கோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ராகி மாவு - 1 கப்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* சமையல் சோடா - 2 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* பூண்டு - 10 பல்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* வெங்காயம் - 3 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் சீரகம், சோம்பு, மிளகாய் தூள், பொட்டுக்கடலை ஆகியவற்றை
சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் சமையல் சோடா, சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
* பிறகு பூண்டு பற்களை நன்கு தட்டிப் போட்டு, அத்துடன் கறிவேப்பிலை
சேர்க்க வேண்டும்.
* பின்னர் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கைகளால் நன்கு
கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் சிறிது நீரை ஊற்றி, பக்கோடா மாவு பதத்திற்கு பிசைந்து
கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து
எண்ணெயில் கிள்ளி போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான
மற்றும் மொறுமொறுப்பான ராகி பக்கோடா தயார்.



Click it and Unblock the Notifications