Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
பிக் பாஸில் பெரிய பிரச்சனைக்கு காரணமான தேங்காய் சம்மந்தியை எப்படி செய்றது-ன்னு தெரியுமா?
Kerala Thenaga Chammanthi Recipe In Tamil: இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி தான் சம்மந்தி. இந்த சம்மந்தி கேரளாவில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி. இந்த சம்மந்தியை தமிழில் துவையல் என்று கூறுவோம். இந்த சம்மந்தியால் பிக் பாஸ் வீட்டில் ஒரு பெரிய பூகம்பமே வெடித்தது. அதன் பின் நிறைய பேர் இந்த சம்மந்தி என்றால் என்ன என்று இணையத்தில் அதிகம் தேட தொடங்கிவிட்டனர்.
கேரளா தேங்காய் சம்மந்தியானது சூடான சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து சாப்பிட்டு போரடிக்கும் போது, சம்மந்தியை செய்து சாதத்துடன் சாப்பிடலாம். இதற்கு காய்கறிகள் எதுவும் தேவையில்லை. மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கும் இந்த சம்மந்தியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா தேங்காய் சம்மந்தி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 2
* வரமிளகாய் - 10
* புளி - 1 எலுமிச்சை அளவு
* தேங்காய் - 1 (துருவியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி - 1/2 இன்ச்
* சீரகம் - 2 டீஸ்பூன்
* கல் உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் மற்றும் புளியை சேர்த்து பச்சை வாசனை போக
வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய வெங்காயம் மற்றும் வரமிளகாயை
சேர்த்து, அத்துடன் துருவிய தேங்காய், கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம்
மற்றும் கல் உப்பு சேர்த்து, நீர் சேர்க்காமல் கொரகொரவென்று அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்ததை ஒரு தட்டில் போட்டு, கைகளால் நன்கு உருட்டினால்,
கேரளா தேங்காய் சம்மந்தி தயார்.



Click it and Unblock the Notifications