Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்... கேரளா ஸ்டைல் மீல் மேக்கர் மசாலா
உங்கள் வீட்டில் மீல் மேக்கர் உள்ளதா? உங்களுக்கு கேரளா ஸ்டைல் ரெசிபிக்கள் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் அந்த மீல் மேக்கரைக் கொண்டு கேரளா ஸ்டைல் மீல் மேக்கர் மசாலாவை செய்து சாப்பிடுங்கள்.
உங்கள் வீட்டில் மீல் மேக்கர் உள்ளதா? அதைக் கொண்டு என்ன செய்து சாப்பிடுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு கேரளா ஸ்டைல் ரெசிபிக்கள் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் அந்த மீல் மேக்கரைக் கொண்டு கேரளா ஸ்டைல் மீல் மேக்கர் மசாலாவை செய்து சாப்பிடுங்கள். இந்த மசாலா சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது செய்வது மிகவும் சுலபம். பேச்சுலர்கள் கூட இதை செய்யலாம்.

உங்களுக்கு கேரளா ஸ்டைல் மீல் மேக்கர் மசாலா எப்படி செய்வதென்று தெரந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா ஸ்டைல் மீல் மேக்கர் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மீல் மேக்கரை வேக வைப்பதற்கு...
* மீல் மேக்கர் - 1 1/2 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - 1 டீஸ்பூன்
மசாலா பவுடருக்கு..
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 இன்ச்
* ஏலக்காய் - 4
* பிரியாணி இலை - 1
* தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
* வரமிளகாய் - 6
தாளித்து வதக்குவதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
* பூண்டு - 5 பல்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
* குடைமிளகாய் - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* தக்காளி சாறு - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் மீல் மேக்கரைப் போட்டு, அதில் போதுமான அளவு நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, உப்பு சேர்த்து, 10 நிமிடம் மீல் மேக்கரை வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரால் மீண்டும் மீல் மேக்கரை அலசி, அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், மல்லி, மிளகு, சோம்பு சேர்க்க வேண்டும்.
* பின் அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, வரமிளகாய் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* அதன் பின் துருவிய தேங்காயை சேர்த்து தேங்காயில் உள்ள நீர் வற்றும் வரை வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் ஒரு நறுக்கிய தக்காளியை போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலா பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி, 1 கப் நீரை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்துள்ள மீல் மேக்கரைப் போட்டு கிளறி சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் குடைமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளி சாஸ் மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான கேரளா ஸ்டைல் மீல் மேக்கர் மசாலா தயார்.
Image Courtesy: hebbarskitchen



Click it and Unblock the Notifications