Latest Updates
-
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
வார ராசிபலன்கள் (அக்டோபர் 18-24) - இந்த வாரம் 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்
Kerala Style Mushroom Thoran Recipe in Tamil: சிக்கன், மட்டனுக்குப் பிறகு பெரும்பாலான மக்களுக்கு பிடித்த ஒரு சுவையான உணவென்றால் அது மஷ்ரூம்தான். அசைவ உணவுகளை எப்படியெல்லாம் சமைக்கிறோமோ அத்தனை வழிகளிலும் காளானை சமைக்கலாம். உங்கள் வீட்டில் தோசை அல்லது சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அப்படியெனில் அதற்கு காளான் சிறந்த சைடிஷாக இருக்கும்.

கேரளாவில் மஷ்ரூமை பல வழிகளில் சுவையாக சமைப்பார்கள். அப்படி ஒரு சுவையான ரெசிபிதான் மஷ்ரூம் தோரன். இந்த மஷ்ரூம் தோரண் சாதம், தோசை, சப்பாத்தி மற்றும் பூரியுடன் சேர்த்து சாப்பிட வேற லெவலில் இருக்கும். இந்த மஷ்ரூம் தோரன் செய்வது மிகவும் எளிதானதாகும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும்.
உங்களுக்கு இந்த சுவையான கேரளா ஸ்டைல் மஷ்ரூம் தோரன் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மஷ்ரூம் தோரன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1/4 கப் துருவிய தேங்காய்
- 1/2 ஸ்பூன் மிளகு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் சீரகம்
- 1 வர மிளகாய்
- 5 சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கியது
- 3 பல் பூண்டு, பொடியாக நறுக்கியது
- 1 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
- 2 கொத்து கறிவேப்பிலை, கிள்ளியது
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
- 300 கிராம் பட்டன் காளான்கள், நான்காக நறுக்கியது
செய்முறை:
- முதலில் அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
- தேங்காய் மசாலாவை அரைப்பதற்கு, ஒரு மிக்ஸி ஜாரில், துருவிய தேங்காய், மிளகு, கறிவேப்பிலை மற்றும் சீரகம் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளவும். இதில் தண்ணீர் சேர்க்காமல், சற்று கொரகொரப்பான மசாலாவாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு வாணலியில் மிதமான தீயில் தேங்காய் எண்ணெயைச் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, சீரகம் மற்றும் வர மிளகாயைச் சேர்த்து, கடுகு பொரியும் வரை தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து, வெங்காயம் மென்மையாகி லேசான பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய காளான்கள், உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும். 2-3 நிமிடங்கள் வதக்கவும்.
- காளான் பாதி வெந்ததும் புதிதாக அரைத்து வைத்த தேங்காய் மசாலாவைச் சேர்த்து, காளான் தோரனைத் தொடர்ந்து கிளறவும்.
- காளான்கள் நன்றாக வெந்ததும், உப்பைச் சரிபார்த்து தேவைக்கேற்பச் சேர்த்து, அடுப்பை அணைத்து விடவும்.அவ்வளவுதான் சுவையான கேரளா ஸ்டைல் மஷ்ரூம் தோரன் ரெடி!



Click it and Unblock the Notifications
