Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
அரை கிலோ சிக்கன் இருந்தா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் செஞ்சு பாருங்க... டேஸ்ட் சும்மா நெருப்பு மாதிரி இருக்கும்!
Kerala Style Chicken Fry Recipe in Tamil: சண்டே என்றாலே அது அசைவ உணவுக்கான நாள் என்று மாறிவிட்டது. ஆனால் சண்டே மட்டும்தான் அசைவம் சாப்பிட வேண்டுமா? அப்படியொன்றும் சட்டமில்லையே. நாம் விரும்பிய நேரத்தில் விரும்பிய உணவை சாப்பிடும் உரிமை நமக்கு நிச்சயம் உள்ளது. பொதுவாக அசைவ உணவுகளை பல வித்தியாசமான வழிகளில் சமைக்கலாம்.
சமைப்பது என்று வரும் போது மற்ற அசைவ உணவுகளை விட சிக்கனை சமைப்பது எளிதானது. சிக்கனை சமைக்கும் வழிகளுக்கு முடிவேயில்லை. கடவுளின் தேசமான கேரளா அசைவ உணவுகளுக்கு புகழ்பெற்றது. வழக்கமான சிக்கனையே அவர்கள் சில கூடுதல் பொருட்கள் சேர்த்து அட்டகாசமான சுவையில் செய்வார்கள்.

இந்த பதிவில் சிம்பிளான அதேசமயம் சூப்பரான கேரள ஸ்டைல் சிக்கன் வறுவலை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம். இந்த கேரள ஸ்டைல் சிக்கன் வறுவல் சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
- சிக்கன் - 1/2 கிலோ
- பெரிய வெங்காயம் - 1
- குடைமிளகாய் - 1
- பொடியாக நறுக்கிய பூண்டு - 2 ஸ்பூன்
- துருவிய இஞ்சி - 2 ஸ்பூன்
- நறுக்கிய மிளகாய் - 2
- முந்திரி பருப்பு - 10
- இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- கறி மசாலா தூள் - 1 1/2 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
- சோயா சாஸ் - ஒரு மூடி
- தக்காளி சாஸ் - ஒரு மூடி
- அஜினமோட்டோ - ஒரு பின்ச்
- சோள மாவு - 1 ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- சிக்கனை கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். குடைமிளகாய், பச்சை மிளகாய் நறுக்கி வைக்கவும். வெங்காயத்தை நான்கு துண்டுகளாக நறுக்கி பின் தனித்தனியாக பிரிக்கவும்
- சிக்கனில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், கறி மசாலா தூள், கார்ன் ப்ளார், உப்பு, எலுமிச்சை சாறு போட்டு 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும்.
- பின் எண்ணெயை தனியாக வடித்து வைத்துக் கொள்ளவும். வடித்த எண்ணெயை கடாயில் ஊற்றி முந்திரியை போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.
- பின்னர் கடாயில் பூண்டு, இஞ்சி, வெங்காயம், மிளகாய், குடைமிளகாய் போட்டு வதக்கவும்.
- அதனுடன் சோயா சாஸ், தக்காளி சாஸ், அஜினமோட்டோ போட்டு சிறிது நேரம் சிம்மில் வைத்து பின் வறுத்த சிக்கன் துண்டுகளை போட்டு ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
- இறுதியாக கொத்தமல்லி இலை வறுத்த முந்திரி போட்டு பரிமாறவும்.



Click it and Unblock the Notifications