Latest Updates
-
பொரி மிச்சமிருந்தா இந்த மாதிரி மொறுமொறுனு வடை சுடுங்க - டீ, காபியோட சாப்பிட சூப்பரா இருக்கும் -
லென்ஸ் போட்டிருக்கீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க.. பார்வைக்கே ஆபத்தாயிடும் - எச்சரிக்கும் கண் டாக்டர்! -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் உலகத்தில் நடக்கப்போகும் மாற்றங்களும், அழிவுகளும் - ஷாக் ஆகாதீங்க -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம் -
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
2 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி கொண்டைக்கடலை மசாலா வடை செய்யுங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
Hair Care Tips: முடி ராக்கெட் வேகத்தில் வளரணுமா? அப்ப இந்த விதைகளில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க
சிக்கனை ஒருதடவை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் 64 செஞ்சு பாருங்க... சூப்பரான சைடிஷா இருக்கும்...!
Kerala Style Chicken 65 Recipe in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சிக்கன் எடுப்பீர்களா? அந்த சிக்கனை வாங்கினால் கட்டாயம் சிக்கன் 65 செய்து சாப்பிடுவீர்களா? எப்போதும் ஒரே சுவையில் சிக்கன் 65 செய்யாமல், ஒருமுறை கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்து சாப்பிடுங்கள். இந்த சிக்கன் 65 நாம் வழக்கமாக சிக்கன் சில்லி போல இல்லாமல், சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும்.
இந்த ஸ்டைல் சிக்கன் 65 செய்தால் பிரியாணி, நெய் சாதம் போன்றவற்றுக்கு அட்டகாசமான சைடிஷாக இருக்கும். இந்த பனிக்காலத்தில் சிக்கனை நன்கு காரசாரமாக சமைத்து சாப்பிட நினைத்தால், இந்த மாதிரி கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்து சாப்பிடலாம். இப்படி செய்யும் போது சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும் மற்றும் காரமாக இருப்பதால் சளி பிடித்திருந்தால், அதிலிருந்து நல்ல நிவாரணமும் கிடைக்கும்.

உங்களுக்கு கேரளா ஸ்டைல் சிக்கன் 65 எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா ஸ்டைல் சிக்கன் 65 ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
செய்முறை:
- அரை கிலோ எலும்பில்லாத சிக்கன்
- 5 சில்லி கார்லிக் சாஸ் (நான் கடையில் வாங்கியதைப்
பயன்படுத்தினேன்)
- 1 டேபிள்ஸ்பூன் பூண்டு, பொடியாக நறுக்கியது
- 2 கொத்து கறிவேப்பிலை
- 5 பச்சை மிளகாய், இரண்டாக கீறியது
- பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய்
மேரினேட் செய்ய:
- 8 வர மிளகாய்
- 1 அங்குல இஞ்சி
- 5 பூண்டு பல்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 1/2 டீஸ்பூன் சோம்பு
- 1 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகள்
- 1/2 டீஸ்பூன் கருப்பு மிளகு
- 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
- 4 டேபிள் ஸ்பூன் தயிர்
- 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
- 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு
- 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1 முட்டை
செய்முறை:
- சிக்கனை நன்றாக கழுவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் வர மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, சோம்பு, சீரகம், கொத்தமல்லி விதைகள், எலுமிச்சை சாறு மற்றும் தயிர் ஆகியவற்றைச் சேர்த்து, கெட்டியான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- தயார் செய்த கெட்டியான மசாலா விழுது, கரம் மசாலா தூள் மற்றும் உப்பை கழுவி வைத்த சிக்கனுடன் சேர்த்து, அனைத்தையும் கைகளால் நன்றாகக் கலக்கவும்.
- பின்னர் மசாலா தடவிய சிக்கனுடன் அரிசி மாவு மற்றும் சோள மாவைச் சேர்த்து நன்றாக கிளறி, 1 மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்.
- ஊறவைத்த சிக்கனுடன் ஒரு முட்டையைச் சேர்த்து, சிக்கனைப் பொரிப்பதற்கு முன் எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவும்.
- ஒரு கடாயில் மிதமான தீயில் சிக்கனைப் பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். சிக்கனை கொஞ்சம் கொஞ்சமாக பொரிக்கத் தொடங்கவும்.
- மொறுமொறுப்பாகி பொன்னிறமாகும் வரை வறுக்கவும். எண்ணெயை வடித்துவிட்டு தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் மிதமான தீயில் ஒரு டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கவும். அதில் நறுக்கிய பூண்டு, கீறிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து 10-20 வினாடிகள் வதக்கவும்.
- இப்போது சில்லி கார்லிக் சாஸை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
- வறுத்த சிக்கனை இதில் சேர்த்து சாஸ் மற்றும் கறிவேப்பிலையுடன் நன்கு கலக்கவும்.
- 2 நிமிடம் நன்றாக கிளறி அடுப்பை அணைத்தால் சூப்பரான கேரளா ஸ்டைல் சிக்கன் 65 ரெடி!



Click it and Unblock the Notifications
