Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
கேரளா பூண்டு சட்னி
இன்று இரவு உங்கள் வீட்டில் தோசை/இட்லி செய்ய போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இன்று உங்கள் வீட்டில் கேரளா பூண்டு சட்னியை செய்யுங்கள்.
இன்று இரவு உங்கள் வீட்டில் தோசை/இட்லி செய்ய போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு கேரளா ரெசிபிக்கள் பிடிக்குமா? அப்படியானால் இன்று உங்கள் வீட்டில் கேரளா பூண்டு சட்னியை செய்யுங்கள். இதை செய்வது மிகவும் ஈஸி மற்றும் வழக்கமாக சாப்பிடும் சட்னியில் இருந்து சற்று வித்தியாசமான சுவையைக் கொண்டது.

உங்களுக்கு கேரளா பூண்டு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா பூண்டு சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* வரமிளகாய் - 4 (சுடுநீரில் 20 நிமிடம் ஊற வைத்தது)
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை போட்டு சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு வதக்கியதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் ஊற வைத்துள்ள வரமிளகாய், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து, சிறிது வெதுவெதுப்பான நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்ததை ஒரு பௌலில்/கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள நல்லெண்ணெயை ஊற்றி சூடானதும், கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, அதில் அரைத்த சட்னியை ஊற்றி கிளறி, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, 1-2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கினால், கேரளா பூண்டு சட்னி தயார்.
Image Courtesy: yummyoyummy



Click it and Unblock the Notifications
