Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
கேரளா சிக்கன் ரோஸ்ட் ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு பாருங்க... அட்டகாசமான சைடிஷா இருக்கும்...!
Kerala Chicken Roast Recipe in Tamil: சண்டே என்றாலே அது அசைவ உணவு சாப்பிடுவதற்கான நாள் என்று மாறிவிட்டது. ஆனால் சண்டே மட்டும்தான் அசைவம் சாப்பிட வேண்டுமா? அப்படியொன்றும் சட்டமில்லையே. நாம் விரும்பிய நேரத்தில் விரும்பிய உணவை சாப்பிடும் உரிமை நமக்கு நிச்சயம் உள்ளது. பொதுவாக அசைவ உணவுகளை பல வித்தியாசமான வழிகளில் சமைக்கலாம்.
அசைவ சமையல் என்று வரும் போது மற்ற அசைவ உணவுகளை விட சிக்கனை சமைப்பது எளிதானது. சிக்கனை சமைக்கும் வழிகளுக்கு முடிவேயில்லை. கடவுளின் தேசமான கேரளா அசைவ உணவுகளுக்கு புகழ்பெற்றது. வழக்கமான சிக்கனையே அவர்கள் சில கூடுதல் பொருட்கள் சேர்த்து அட்டகாசமான சுவையில் செய்வார்கள். கேரளா ஹோட்டல்களுக்கு சென்றால் அங்கு சிக்கன் ரோஸ்ட் என்று ஒரு சூப்பரான வறுவல் கிடைக்கும். அது பிரியாணி, சப்பாத்தி மற்றும் புரோட்டா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு கேரளா ஸ்டைல் சிக்கன் ரோஸ்ட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா ஸ்தாயில் சிக்கன் ரோஸ்ட்டின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- சிக்கன் அரை கிலோ
- 4 பெரிய வெங்காயம் நீளவாக்கில் நறுக்கியது
- 4 பச்சை மிளகாய் நீளவாக்கில் கீறியது
- 1 தக்காளி நறுக்கியது
- 4 டேபிள் ஸ்பூன் தயிர்
½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
- 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
- 1 டீஸ்பூன் கிராம்பு , இலவங்கப்பட்டை, ஏலக்காய் அரைத்தது
- ஒரு சிட்டிகை கேசரி பவுடர்
- 1 டீஸ்பூன் சிக்கன் மசாலா
- ஒரு கொத்து கறிவேப்பிலை
- ¼ டீஸ்பூன் சோம்பு
- 2 டீஸ்பூன் கொத்தமல்லி தூள்
- ½ டீஸ்பூன் கடுகு
- இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
- 2 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
செய்முறை:
- சிக்கனை தயிர், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஃப்ரிட்ஜில் வைத்து விடுவது நல்லது.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் சோம்பு சேர்க்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்க்கவும். தீயைக் குறைத்து மிதமான சூட்டில் வைத்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அதைத்தொடர்ந்த மல்லித் தூள் மற்றும் ப்ரெஷாக அரைத்தத மசாலாப் பொருட்களை (கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை) சேர்த்து சில நொடிகள் வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து, கலவை மணம் வரும் வரை வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை மற்றும் ஒரு சிட்டிகை கேசரி பவுடர் சேர்த்து நன்றாக கலக்கவும். தக்காளி குழையும் வரை வேக வைக்கவும்.
- பின் ஊறவைத்த சிக்கநாய் கடாயில் போட்டு, தீயை மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறவும். சிக்கன் நன்றாக வேகும் வரை அடிக்கடி கிளறிக்கொண்டே இருக்கவும்.
- இதில் தண்ணீர் சேர்க்க வேண்டி அவசியமில்லை, எண்ணெயில் சிக்கனிலிருந்தே போதுமான தண்ணீர் வெளிவரும். உப்பு சரிபார்த்து, சிக்கன் மென்மையாக வேகும் வரை வறுக்கவும். இதற்கு சுமார் 20-25 நிமிடங்கள் தேவைப்படும்.
- சிக்கன் நன்றாக வெந்து, அதில் உள்ள நீர் பெரும்பாலும் வற்றிப்போனதும், சிக்கன் மசாலாவைச் சேர்த்து நன்றாக கலக்கவும். மேலும் ஒரு நிமிடம் சமைத்து, அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
- இறுதியாக கொத்தமல்லி தூவி கிளறினால் சூப்பரான கேரளா சிக்கன் ரோஸ்ட் ரெடி!



Click it and Unblock the Notifications