Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
எப்பவும் கீரையை ஒரே மாதிரி சமைக்காம.. ஒருமுறை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்டியா இருக்கும்..
Keerai Mor Kootu Recipe In Tamil: கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. எப்போதும் சாம்பார், புளிக்குழம்பு செய்து போரடித்துவிட்டதா? வெயில் அதிகம் இருப்பதால், காரமாக சாப்பிட பிடிக்கவில்லையா? கோடையில் உடலைக் குளிர்ச்சியாகவும், நீரேற்றத்துடனும் வைத்துக் கொள்ள கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள்.
அதுவும் கீரையை வழக்கமாக செய்வது போன்று பொரியல், கடையல் என்று செய்யாமல், கீரை மோர் கூட்டு செய்து சாப்பிடுங்கள். இந்த கூட்டு சாதத்துடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு கீரை மோர் கூட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கீரை மோர் கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிறுகீரை - 1 கட்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 டம்ளர்
* தயிர் - 1 கப்
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1/4 கப்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
* தயிர் - 1/4 கப்
* அரிசி மாவு - 1/2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 10 பல் (தட்டிக் கொள்ளவும்)
* சிறிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் கீரையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி, நீரில் அலசிக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், தயிர்,
அரிசி மாவு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கழுவி வைத்துள்ள கீரையை
சேர்த்து, சிறிது உப்பு மற்றும் 1 டம்ளர் நீரை ஊற்றி, 10 நிமிடம் வேக
வைக்க வேண்டும்.
* கீரை நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை
சேர்த்து கிளறி, நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் தயிரை
கட்டிகளின்றி நன்கு அடித்து ஊற்றி கிளறி, அடுப்பை அணைத்துவிட
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயத் தூள்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை
சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி இறக்கி, கீரையுடன் சேர்த்து
கிளறினால், சுவையான கீரை மோர் கூட்டு தயார்.
Image Courtesy: Traditionally Modern Food



Click it and Unblock the Notifications