Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சிக்கன் வாங்குனா.. கவுண்டம்பாளையம் சிக்கன் கிரேவியை ட்ரை பண்ணி பாருங்க.. டேஸ்ட் சும்மா நச்சுன்னு இருக்கும்..
Kavundampalayam Chicken Gravy Recipe In Tamil: புரட்டாசி முடிந்துவிட்டது. அனைவரது வீட்டிலும் இன்று சிக்கன், மட்டன், மீன் என்று அசைவ உணவுகளை வாங்கி சமைத்து, வீட்டில் ஒரு விருந்தே தயார் செய்வார்கள். இன்று உங்கள் வீட்டில் ஒரு ஸ்பெஷல் சிக்கன் ரெசிபியை செய்ய நினைத்தால், கவுண்டம்பாளையம் சிக்கன் கிரேவியை செய்யுங்கள்.
இந்த சிக்கன் கிரேவி 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் இது இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிடுமாறு அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு கவுண்டம்பாளையம் சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கவுண்டம்பாளையம் சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 3/4 கிலோ
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 100 கிராம்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பூண்டு - 10 பல்
* இஞ்சி - சிறிய துண்டு
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 2 டீஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 4
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* தேங்காய் - 1/4 மூடி (துருவியது)
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்கு
கிளறி, நீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் ஊற்றி
சூடானதும், சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் 1/2 டீஸ்பூன் மிளகு, 1 டீஸ்பூன் சீரகம், 1 துண்டு
பட்டை, 1 டீஸ்பூன் சோம்பு, 2 கிராம்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் துருவிய தேங்காய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம்
வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் சிறிது
நீரை ஊற்றி நன்கு மெனமையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், 1 துண்டு பட்டை, 2 கிராம்பு, 1 டீஸ்பூன்
சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க
வேண்டும்.
* அடுத்து நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின் அதில் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு 3 நிமிடம் வதக்கி, பின் 5 நிமிடம்
மூடி வைத்து குறைவான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை சேர்த்து,
கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி மூடி வைத்து 10 நிமிடம்
குறைவான தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான கவுண்டம்பாளையம்
சிக்கன் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications