Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
கத்திரிக்காயை ஒருடைம் இந்த பக்குவத்துல வறுவல் செய்யுங்க.. போட்டி போட்டு காலி பண்ணுவாங்க..
Kathirikkai Podi Varuval Recipe In Tamil: அனைத்து காலங்களிலும் விலைக் குறைவில் கிடைக்கும் ஒரு காய்கறி என்றால் அது கத்திரிக்காய் தான். ஆனால் இந்த கத்திரிக்காயை பலரும் விரும்பி சாப்பிடமாட்டார்கள். அப்படியே சாம்பாரில் சேர்த்தாலும் ஒதுக்கி வைத்துவிடுவார்கள். உங்கள் வீட்டிலும் இப்படி தானா?
அப்படிப்பட்டவர்களை கத்திரிக்காயை விரும்பி சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் பொடி கத்திரிக்காய் வறுவலை செய்யுங்கள். இந்த வறுவல் செய்வதற்கு தனியே ஒரு பொடியை வறுத்து அரைத்து சேர்க்க வேண்டும். இதுதான் இந்த வறுவலின் சுவைக்கு முக்கிய காரணம். இந்த வறுவல் சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு பொடி கத்திரிக்காய் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொடி கத்திரிக்காய் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பொடி செய்வதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 6-8
* கறிவேப்பிலை - 2 கொத்து
* வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
வறுவல் தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கத்திரிக்காய் - 350 கிராம் (நீளவாக்கில் சற்று தடிமனாக
நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* புளி - பெரிய நெல்லிக்காய் அளவு (1/4 கப் நீரில் ஊற வைத்து சாறு
எடுத்துக் கொள்ளவும்.)
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வறுத்து அரைத்த பொடி - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் புளியை 1/4 கப் நீரில் ஊற வைத்து, பின் பிசைந்து சாறு
எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொடி செய்ய தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, மல்லி, வெந்தயம்
சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் வேர்க்கடலை சேர்த்து 1 நிமிடம் வறுத்து இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* வறுத்த பொருட்கள் நன்கு குளிர்ந்த பின் ஈரப்பதமில்லாத மிக்சர்
ஜாரில் போட்டு நன்கு அரைத்து பொடி செய்து, தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்னர் அதில் நீளவாக்கில் சற்று தடிமனாக நறுக்கிய கத்திரிக்காயை
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் தூவி நன்கு கிளறி
விட்டு, மூடி வைத்து, கத்திரிக்காயை 4-5 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* கத்திரிக்காய் முக்கால்வாசி வெந்ததும், கரைத்து வைத்துள்ள
புளிச்சாற்றினை சேர்த்து கிளறி, பெருங்காயத் தூள் சேர்த்து மீண்டும்
மூடி வைத்து 3-4 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 4 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் அரைத்து வைத்துள்ள
பொடியை தேவையான அளவு சேர்த்து கிளறி விட வேண்டும். மீதமுள்ளதை ஒரு
டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால், 10 நாட்கள் வரை வைத்து
பயன்படுத்தலாம்.
* பொடி சேர்த்த பின் மூடி வைக்கக்கூடாது. கத்திரிக்காய் பொடியுடன்
ஒன்று சேரும் வரை நன்கு கிளறி, ஓரளவு ரோஸ்ட் ஆனதும், அடுப்பை
அணைத்துவிட்டால், சுவையான பொடி கத்திரிக்காய் வறுவல் தயார்.



Click it and Unblock the Notifications











