Latest Updates
-
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
கத்திரிக்காயை வழக்கமான குழம்பு வைக்காம இந்த மாதிரி கெட்டி குழம்பு வைச்சு பாருங்க..வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்!
Kathirikkai Ketti Kulambu Recipe in Tamil: ஒவ்வொரு நாளும் மதிய வேளையில் என்ன சமைப்பது என்று தெரியாமல் முழிக்கிறீர்களா? அப்படியானால் ஒரு நாள் மதிய வேளையில் சாதத்துடன் சாப்பிட ஏற்றவாறு ஒரு அட்டகாசமான குழம்பு செய்யுங்கள். அதுவும் உங்கள் வீட்டில் கத்திரிக்காய் இருந்தால், அவற்றைக் கொண்டு கெட்டிக் குழம்பு செய்யுங்கள்.
இந்த அட்டகாசமான குழம்பை செய்ய முதலில் ஸ்பெஷல் ஒரு பொடியைத் தயாரிக்க வேண்டும். பொதுவாக கத்தரிக்காயை வைத்து சாம்பார் அல்லது காரக் குழம்புதான் சாப்பிடுவோம், சில சமயங்களில் கத்திரிக்காயை வைத்து பொரியல் கூட செய்வோம். ஆனால் இது எதுவுமே இல்லாமல் கத்திரிக்காயை வைத்து சூப்பரான கெட்டிக் குழம்பு செய்யலாம். கத்திரிக்காயை இந்த மாதிரி குழம்பு செய்து கொடுத்தால் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு கத்திரிக்காய் கெட்டி குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் கெட்டிக் குழம்பின் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- கத்தரிக்காய் - 1/4 கிலோ
- சின்ன வெங்காயம் - 100 கிராம்
- பூண்டு - 10 பல்
- புளி - பெரிய எலுமிச்சையளவு
- துவரம் பருப்பு - 1 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- மஞ்சள் பொடி - 1 ஸ்பூன்
- பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- அரிசி மாவு - 1 ஸ்பூன்
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
- வரமிளகாய் - 7
- மல்லி விதை - 2 ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
- உளுந்து - 1 ஸ்பூன்
- வெந்தயம் - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
செய்முறை:
- புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டவும்.
- அரைக்க வைத்துள்ளவற்றை ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றாமல் நன்கு சிவக்கும் படி வறுத்து நைஸாக அரைக்கவும்.
- அரைத்த விழுது, உப்பு, புளி மூன்றையும் ஒன்றாக கலக்கி வைக்கவும்.
- வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கத்தரிக்காயை குறுக்காக நான்காகவும், பூண்டை தட்டியும் வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் அதில் உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு போட்டு போட்டு வதக்கவும்.
- பருப்பு சிவந்ததும் நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
- வெங்காயம் பாதி வதங்கியதும் பெருங்காயத்தூள், மஞ்சள் பொடி, கத்தரிக்காய் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.
- கத்திரிக்காய் நன்றாக வதங்கியதும் கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றவும்.
- எல்லாம் சேர்ந்து கொதித்து பச்சை வாசனை போனதும் அரிசி மாவை கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து குழம்பில் ஊற்றி கொதிக்க விடவும்.
- குழம்பு நன்றாக கொதித்து கெட்டியானதும் இறக்கி பரிமாறவும். அவ்வளவுதான் சூப்பரான கத்திரிக்காய் கெட்டிக் குழம்பு ரெடி!



Click it and Unblock the Notifications
