Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
கத்திரிக்காயையும், எள்ளையும் கொண்டு இப்படி மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அருமையா இருக்கும்..
Kathirikkai Ellu Masala Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? நீங்கள் எப்போதும் சப்பாத்திக்கு ஒரே மாதிரி தான் சைடு டிஷ் செய்வீர்களா? ஆனால் இன்று அந்த சப்பாத்திக்கு அட்டகாசமான மற்றும் வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா?
அப்படியானால் அந்த கத்திரிக்காயுடன், எள்ளு விதைகளை சேர்த்து ஒரு அட்டகாசமான மசாலாவை செய்யுங்கள். இந்த கத்திரிக்காய் எள்ளு மசாலா ஆந்திராவில் பிரபலமானது மற்றும் இதை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு கத்திரிக்காய் எள்ளு மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரக்காய் எள்ளு மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய கத்திரிக்காய் - 1
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு...
* வரமிளகாய் - 4
* எள்ளு விதைக - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 4 பல்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், எள்ளு
விதைகள் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கிக்
குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் கத்திரிக்காயை நீரில் கழுவி, அதை நீளத் துண்டுகளாக வெட்டிக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கத்திரிக்காய் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் உப்பு, சர்க்கரை மற்றும் மஞ்சள் தூள், மல்லித்
தூள், சீரகத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் வாணலியை மூடி வைத்து 10 நிமிடம் கத்தரிக்காயை வேக வைக்க
வேண்டும்.
* கத்திரிக்காய் நன்கு வெந்ததும், அதில் எள்ளு மசாலாவை சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி நன்கு கிளறி, 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக புளிச்சாற்றினை சேர்த்து கிளறி, 5 நிமிடம் மீண்டும் வேக
வைத்து இறக்கினால், சுவையான கத்திரிக்காய் எள்ளு மசாலா தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications