Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் ரசம் ரெசிபி... ஒரு தடவை செஞ்சு பாருங்க... வேற குழம்பே வைக்க வேணாம்...!
Kathirikai Rasam Recipe in Tamil: ரசம் என்பது தென்னிந்தியாவின் தவிர்க்க முடியாத உணவுகளில் ஒன்றாகும். ரசம் உணவு வகைகளில் ஒன்றாக மட்டுமின்றி, குளிர்காலங்களில் மருந்தாகவும் உட்கொள்ளப்படுகிறது. உங்கள் வீட்டில் உள்ளவர்கள் தினமும் ரசம் இல்லாமல் மதியம் சாப்பிடமாட்டார்களா? ஆனால் உங்களுக்கு தினமும் ஒரே மாதிரி ரசம் வைத்து போரடித்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை இந்த ஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் ரசத்தை செய்து பாருங்கள்.
இந்த ஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் ரசம் செய்தால் நீங்கள் தனியாக குழம்பு எதுவும் வைக்க வேண்டிய அவசியமே இருக்காது. முக்கியமாக இந்த ரசத்தை செய்தால் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள், சொல்லப்போனால் கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இது சுவையானதாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் எளிதானதாகவும் இருக்கும். இந்த பதிவில் ஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் ரசத்தை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- கத்தரிக்காய் - 1/4 கிலோ
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- வர மிளகாய் - 2
- சீரகம் - 1 ஸ்பூன்
- பெருங்காய தூள்- 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை- தேவையான அளவு
- புளி கரைசல் - 1/2 கப்
- வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 2
- வெல்லம்- 2 ஸ்பூன்
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- முதலில் கத்தரிக்காயின் மேற்பகுதியில் லேசாக எண்ணெய் தடவி கொள்ளுங்கள். அடுத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து கத்தரிக்காவை சுட்டு எடுத்து கொள்ளுங்கள்.
- பின்னர் சுட்ட கத்தரிக்காயின் மேல் சிறிதளவு தண்ணீர் தெளித்து அதன் தோலினையும் காம்பினையும் நீக்கி விட்டு ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
- இப்போது, ஒரு கரண்டியை வைத்து கத்தரிக்காவை மசித்து கொள்ளுங்கள்.
- நன்றாக மசித்த பிறகு, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
- பிறகு, இதனுடன் உடைத்த வெல்லம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
- பின்னர் கரைத்து வைத்த புளி கரைசலை சேர்த்து அதனுடன் 1 கப் அளவிற்கு தண்ணீரும் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும், அதில் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விடுங்கள்.
- பிறகு இரண்டாக நறுக்கிய வர மிளகாய், பெருங்காயத் தூள் மற்றும் 2 கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
- இப்போது வதக்கிய பொருட்களை எடுத்து தயார் செய்து வைத்துள்ள கத்தரிக்காய் ரசத்தில் சேர்த்தால் சுவையான ஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் ரசம் தயார்.



Click it and Unblock the Notifications