Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சாதம், சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும்.. கத்திரிக்காய் பருப்பு கூட்டு
Kathirikai Paruppu Kootu Recipe: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போறீங்களா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் குருமா, மசாலா என்று தான் செய்வீர்களா? அப்படியானால் இன்று கூட்டு செய்யுங்கள். அதுவும் கத்திரிக்காய் பருப்பு கூட்டு செய்யுங்கள்.
இந்த பருப்பு கூட்டு சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். மேலும் இதை சாதத்திற்கு சைடு டிஷ்ஷாகவும் சாப்பிடலாம். முக்கியமாக இந்த கூட்டு செய்வதற்கு சுபலமாக இருக்கும். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு கத்திரிக்காய் பருப்பு கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் பருப்பு கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கத்திரிக்காய் - 4 (நறுக்கியது)
* துவரம் பருப்பு - 1/2 கப் (நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, கழுவிக்
கொள்ளவும்)
* கடுகு - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* புளிநீர் - 1 கப்
* வெல்லம் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மல்லி - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* துருவிய தேங்காய் -1/4 கப்
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், மல்லி விதை, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு
சேர்த்து சில நொடிகள் வறுக்க வேண்டும்.
* பின் அதில் மிளகு, வரமிளகாய், தேங்காய் சேர்த்து நிறம் மாறும் வரை
வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் கத்திரிக்காயை சேர்த்து, உப்பு மற்றும் மஞ்சள் தூள்
சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் புளிநீரை ஊற்றி, வெல்லத்தை சேர்த்து, குறைந்தது 5 நிமிடம்
கத்திரிக்காயை வேக வைக்க வேண்டும்.
* பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, அத்துடன் ஊற வைத்துள்ள
துவரம் பருப்பை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி கிளறி, குக்கரை மூடி
3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து கரண்டியால் கிளறும் போது லேசாக
மசித்து விட வேண்டும். இப்போது சுவையான கத்திரிக்காய் பருப்பு கூட்டு
தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications