Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சப்பாத்திக்கு வித்தியாசமான சூப்பரான சைடிஷ் செய்யணுமா? இந்த கத்திரிக்காய் மசாலா கறியை செய்யுங்க...!
Kathirikai Masala Curry Recipe in Tamil: கத்தரிக்காய் பலருக்கும் பிடிக்காத காய்கறிகளில் ஒன்றாகும். கத்தரிக்காய் பெரும்பாலான மக்களுக்கு பிடிக்காமல் போக காரணம் அது சமைக்கும் முறைதான், சரியான முறையில் சமைத்துக் கொடுத்தால் கத்தரிக்காயையும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? அந்த கத்திரிக்காய் கொண்டு சுவையான, அதே சமயம் சாதம், சப்பாத்தி என அனைத்திற்கும் பக்காவாக பொருந்தும் சைடிஷ் செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் இந்த கத்திரிக்காய் மசாலா கிரேவியை செய்யுங்கள். இந்த கத்திரிக்காய் கிரேவி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இந்த பதிவில் சூப்பரான கத்தரிக்காய் மசாலா கறியை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- கத்திரிக்காய் - 1/2 கிலோ
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- பட்டை - 1
- கிராம்பு - 3
- கறிவேப்பில்லை - 1 கொத்து
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
மசாலா விழுது அரைக்க:
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
- சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 6
- பூண்டு - 6 பல்
- இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
- பச்சை மிளகாய் - 2
- காய்ந்த மிளகாய் - 4
- முழு மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
- நறுக்கிய தக்காளி - 2
- துருவிய தேங்காய் - 1/2 கப்
- தண்ணீர் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மல்லி விதை, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் வர மிளகாய், மிகு, தக்காளி, உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பின்னர் தேங்காய் துருவல் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். இந்த மசாலாவை நன்கு ஆறவிடவும்.
- ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் எடுத்து, உப்பு சேர்க்கவும். இதில் கத்திரிக்காயை நறுக்கி போடவும்.
- ஆறிய மசாலாவை மிக்ஸியில் போட்டு, முதலில் தண்ணீர் இன்றி அரைக்கவும். பின் சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும்.
- இன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, கறிவேப்பில்லை, வெந்நீரில் ஊற வைத்த கத்திரிக்காய் துண்டுகள் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் இதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
- கத்தரிக்காய் பாதி வெந்ததும் அதில் அரைத்த மசாலா விழுது சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறவும்.
- கடாயை மூடி 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
- கத்தரிக்காய் நன்கு வெந்து கிரேவி பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
- சூப்பரான கத்தரிக்காய் மசாலா கரி ரெடி. இது சாதம், சப்பாத்தி என அனைத்திற்கும் பக்காவான சைடிஷாக இருக்கும்.



Click it and Unblock the Notifications