Latest Updates
-
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்..
காரசாரமான... காஷ்மீரி சில்லி சிக்கன் - சிம்பிளா எப்படி செய்யணும் தெரியுமா?
Kashmiri Chilli Chicken Recipe In Tamil: இன்று உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கியுள்ளீர்களா? அந்த சிக்கனைக் கொண்டு ஒரு வித்தியாசமான ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் சற்று காரசாரமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் காஷ்மீரி சில்லி சிக்கனை செய்யுங்கள். இந்த சில்லி சிக்கனை சளி பிடித்திருக்கும் போது சாப்பிட்டால், நெஞ்சு சளி கரைந்து, நிவாரணம் கிடைக்கும். இந்த சில்லி சிக்கன் ரெசிபியை ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

உங்களுக்கு காஷ்மீரி சில்லி சிக்கனை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காஷ்மீரி சில்லி சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* புதினா - 20 இலைகள்
* கொத்தமல்லி - சிறிது
* பச்சை மிளகாய் - 4
வறுத்து பொடி செய்வதற்கு...
* மிளகு - 1/2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/4 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/4 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 1/4 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 4 துண்டு
தாளிப்பதற்கு...
* வெண்ணெய் - 100 கிராம்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டேபிள் ஸ்பூன்
* எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
* உப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 50 மிலி
* கருப்பு மிளகுத் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
* வெள்ளை மிளகுத் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* பிரஷ் க்ரீம் - 100 மிலி
* பச்சை மிளகாய் - 3
* ஸ்பிரிங் ஆனியன் - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் புதினா, மல்லி மற்றும் பச்சை மிளகாய்
சேர்த்து நன்கு அரைத்து பேஸ்ட் செய்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, சோம்பு, சீரகம்,
மல்லி மற்றும் பட்டையை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி
குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து
உருகியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் கழுவி வைத்துள்ள எலும்பில்லாத சிக்கனை சேர்த்து,
அத்துடன் 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி 5 நிமிடம்
சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள புதினா மல்லி விழுதை சேர்த்து
கிளறி, அத்துடன் தயிரை சேர்த்து பிரட்டி, குறைவான தீயில் வைத்து,
சிக்கனை 10-15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை
சேர்த்து ஒருமுறை கிளறி, பின் அதில் கருப்பு மிளகுத் தூள், வெள்ளை
மிளகுத் தூள் சேர்த்து கிளறி, 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் பிரஷ் க்ரீம் சேர்த்து கிளறி, பின் நறுக்கிய பச்சை
மிளகாய், 1/2 கைப்பிடி ஸ்பிரிங் ஆனியன் மற்றும் சிறிது கொத்தமல்லியைத்
தூவி கிளறி உடனே இறக்கினால், சுவையான காஷ்மீரி சில்லி சிக்கன்
தயார்.



Click it and Unblock the Notifications