Latest Updates
-
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
கறிவேப்பிலை அதிகமா இருந்தா.. ஒருமுறை இந்த சிக்கன் சுக்கா செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Karuveppilai Chicken Sukka Recipe In Tamil: விடுமுறை நாட்களில் வீட்டில் பலவிதமான அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவீர்களா? இந்த வாரம் ஸ்பெஷலாக என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? வீட்டில் சிக்கன் வாங்கியிருக்கிறீர்களா? அதே சமயம் வீட்டில் கறிவேப்பிலையும் அதிகமாக உள்ளதா?
அப்படியானால் அந்த சிக்கனைக் கொண்டு கறிவேப்பிலை சிக்கன் சுக்காவை செய்யுங்கள். இந்த கறிவேப்பிலை சிக்கன் சுக்கா சுவையானது மட்டுமின்றி சத்தானதும் கூட. கறிவேப்பிலை சாப்பிட மறுப்பவர்களுக்கு, இப்படி செய்து கொடுத்தால், கறிவேப்பிலையின் சத்துக்களை முழுமையாக கிடைக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்தால், விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு கறிவேப்பிலை சிக்கன் சுக்காவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கறிவேப்பிலை சிக்கன் சுக்கா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 3
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1/2 கப்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
* பச்சை மிளகாய் - 3 (கீறியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை - 3 கொத்து
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* எலும்பில்லாத சிக்கன் - 1/4 கிலோ
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பட்டை, கிராம்பு,
ஏலக்காய், சோம்பு, சீரகம், மிளகு சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க
வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர
வைத்து, மிக்சர்ஜாரில் போட்டு நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு, துருவிய இஞ்சி மற்றும் பச்சை
மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள் சேர்த்து, சின்ன வெங்காயத்தையும் சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் கறிவேப்பிலை சேர்த்து, அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை
பொடி மற்றும் மல்லித் தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி
விட வேண்டும்.
* அடுத்து எலும்பில்லாத சிக்கனை நீரில் கழுவி, அதை வாணலியில் சேர்த்து
நன்கு கிளறி விட்டு மூடி வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து
இறக்கினால், சுவையான கறிவேப்பிலை சிக்கன் சுக்கா தயார்.
குறிப்பு: எலும்பில்லாத சிக்கனை சிறு துண்டுகளாக்கி பயன்படுத்தும் போது, சிக்கன் வேகமாக வெந்துவிடும். மேலும் நீர் சேர்க்கவும் தேவையில்லை.
Image Courtesy: Madras Samayal



Click it and Unblock the Notifications