Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை!
சண்டே சமையலை சூப்பரானதாக மாற்றும் கறிவேப்பிலை சிக்கன் - செஞ்சு பாருங்க நீங்களே அசந்துருவீங்க
Karuveppilai Chicken Recipe in Tamil: சண்டே என்றாலே அசைவம்தான், அதிலும் குறிப்பாக சிக்கன்தான். சிக்கன் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவு என்பதை நாம் அறிவோம். சிக்கனை எத்தனை வகைகளில் சமைக்கலாம் என்பதற்கு கணக்கே இல்லை. ஒவ்வொரு நாளும் சிக்கனை சுவையாக சமைப்பதற்கு புதுப்புது வழிகள் கண்டுபிடிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.

சிக்கனை குழம்பு, வறுவல், சுக்கா மற்றும் கபாப் என பல வழிகளில் சமைக்கலாம். அப்படி பிரியாணி மற்றும் பிற சாப்பாடு வகைகளுக்கு சைடிஷாக வைத்து சாப்பிடக்கூடிய ஒரு உலர்ந்த சிக்கன் வறுவல்தான் கறிவேப்பிலை சிக்கன்.
கறிவேப்பிலையின் நன்மைகள் என்னென்ன என்பதை நாம் நன்கு அறிவோம். இதை சிக்கனுடன் அதிகளவில் சேர்த்து சமைத்து சாப்பிடும்போது அதன் நன்மைகளும், சுவையும் பலமடங்கு அதிகரிக்கும். இந்த பதிவில் சண்டே செய்வதற்கு ஏற்ற சூப்பரான கறிவேப்பிலை சிக்கனை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- சிக்கன் - அரை கிலோ
- நறுக்கிய வெங்காயம் - 1
- இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 3
- மல்லித்தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- உப்பு - தேவைக்கு ஏற்ப
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
கறிவேப்பிலை மசாலா செய்ய:
- கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
- இலவங்கப்பட்டை - 1
- அன்னாசி பூ - 1
- ஏலக்காய் - 1
- சோம்பு - 1 ஸ்பூன்
- வரமிளகாய் - 2
- மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
செய்முறை:
- சிக்கனை நன்றாக கழுவி ஓரமாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- கருவேப்பிலை மசாலா செய்ய, ஒரு கடாயை குறைந்த தீயில் சூடாக்கி, கறிவேப்பிலை, இலவங்கப்பட்டை, அன்னாசி பூ, ஏலக்காய், சோம்பு, வர மிளகாய், கருப்பு மிளகு ஆகியவற்றைச் சேர்த்து, அனைத்தையும் வறுத்து, மசாலா வாசனை வரும் வரை வறுக்கவும். வறுத்தவுடன் ஆற விடவும்.
- வறுத்த மசாலா நன்கு ஆறியதும் அதை மிக்ஸி ஜாரில் போட்டு மென்மையான பொடியாக அரைக்கவும். இதை ஓரமாக வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு பாத்திரத்தை மிதமான தீயில் வைத்து, சிறிது எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பச்சை வாசனை போனதும் வெங்காயத்தைச் சேர்த்து அது பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், அதில் பச்சை மிளகாய் மற்றும் சிக்கனுடன் மஞ்சள் தூளை சேர்த்து வதக்கவும்.
- சிக்கன் பாதி வேகும் வரை பொருட்களை ஒன்றாகக் கிளறவும். சிக்கன் பாதி வெந்ததும் அதில் அரைத்து வைத்த கறிவேப்பிலை மசாலா மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்து, உப்பு தூவி,சிக்கன் நன்றாக வேகும் வரை வதக்கவும்.
- சிக்கன் அடிபிடிக்காமல் அடிக்கடி கிளறி விடவும். சிக்கன் முழுமையாக வெந்ததும் இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை போட்டு அடுப்பை அணைக்கவும்.
- சண்டே சைடிஷாக சாப்பிடுவதற்கு சூப்பரான கறிவேப்பிலை சிக்கன் ரெடி!



Click it and Unblock the Notifications