Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
1 கைப்பிடி கறிவேப்பிலையும், 1/2 கிலோ சிக்கனும் வெச்சு.. இந்த வறுவலை செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்...
Karuveppilai Chicken Recipe In Tamil: இன்று உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கியுள்ளீர்களா? அந்த சிக்கனை கொண்டு வித்தியாசமான சுவையில், அதுவும் இதுவரை நீங்கள் செய்திராத ஒரு சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் 1 கைப்பிடி கறிவேப்பிலை உள்ளதா? அப்படியானால் அந்த கறிவேப்பிலையையும், சிக்கனையும் கொண்டு அற்புதமான சுவையில் வறுவல் செய்யுங்கள்.
இந்த கறிவேப்பிலை சிக்கன் ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். விடுமுறை நாளில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைத்தால், ரசம் வைத்து, கறிவேப்பிலை சிக்கனை செய்தால் போதும். அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த கறிவேப்பிலை சிக்கனை ஒருமுறை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்ய சொல்வார்கள்.

உங்களுக்கு கறிவேப்பிலை சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கறிவேப்பிலை சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து பொடி செய்வதற்கு...
* கறிவேப்பிலை - 1 கைப்பிடி
* வரமிளகாய் - 5
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 3
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 1
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* சிக்கன் - 500 கிராம்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கைப்பிடி
கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் வரமிளகாய், மிளகு, சோம்பு, சீரகம், மல்லி,
கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து, நல்ல மணம் வரும் வரை வறுத்து
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்கள் மற்றும் கறிவேப்பிலையை
சேர்த்து நன்கு பொடித்து தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு
பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சிக்கனை கழுவி சேர்த்து 2 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறி விட்டு, மூடி வைத்து, மிதமான தீயில்
வைத்து 15 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும். முக்கியமாக
அடிப்பிடிக்காமல் இருக்க அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விட
வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் அரைத்து வைத்துள்ள
கறிவேப்பிலை பொடியை சேர்த்து கிளறி, மீண்டும் மூடி வைத்து 5 நிமிடம்
வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கொத்தமல்லியைத் தூவி கிளறி
இறக்கினால், சுவையான கறிவேப்பிலை சிக்கன் தயார்.



Click it and Unblock the Notifications